Vaarayo Vennilave

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே ஏ
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே ஏ
வாராயோ வெண்ணிலாவே

அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதினாள்
அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதினாள்
சதிப்பதி விரோத மிகவே
சிதைந்தது இதம் தரும் வாழ்வே

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே ஏ
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே ஏ
வாராயோ வெண்ணிலாவே

வாக்குறிமை தந்த பசியால்
வாழ்நதிடவே வந்த சதி நான்
வாக்குறிமை தந்த பசியால்
வாழ்நதிடவே வந்த சதி நான்
நம்பிடச் செய்வார் நேசம்
நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே ஏ
வாராயோ வெண்ணிலாவே

தன் பிடிவாதம் விடாது
என் மனம் போல் நடக்காது
தன் பிடிவாதம் விடாது
என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது
நம்மையும் பேச விடாது

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே ஏ
வாராயோ வெண்ணிலாவே

அனுதினம் செய்வார் மோடி
அகம் மகிழ்வார் போராடி
அனுதினம் செய்வார் மோடி
அகம் மகிழ்வார் போராடி

இல்லறம் இப்படி நடந்தால்
நல்லறமாமோ நிலவே

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே ஏ
வாராயோ வெண்ணிலாவே



Credits
Writer(s): Thanjai Ramaiah Das, S Rajeshwara Rao
Lyrics powered by www.musixmatch.com

Link