Ayya (From"Seethakaathi")

சுற்றும் புவி முற்றும் புகழ் எட்டும்
இவன் முகம் காட்ட
பற்றும் உயிர் அற்றும்
திறன் திரை மேவிடும்
முன்னும் இதன் பின்னும்
இனையில்லாதொரு வினையற்ற
கொட்டும் விழி காட்டும்
கலை அரங்கேரிடும்
கற்றை ஒளி பற்றி
திகழ் வித்தை அதில் கலந்துட்ட
கட்டும் கை தட்டும்
ஒளி கடல் மீறிடும்
கட்டும் கரை முட்டும்
பெரு வெள்ளம் இவர் புரண்டோட
முற்றா வேர் பட்றா வரை
அரண்றோடிடும்

தீரா ஊற்றாக
மாறா மாற்றாக
சேரா ஆழங்கள் சென்று சேர்ந்தான்
தீரா ஊற்றாக
மாறா மாற்றாக
வாழாமல் வாழ்வானான்... நான் நான்

அய்யா...
ஆதவனை கையாலே மறைப்பான் எவன்
அய்யா...
ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா...
இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன்
அய்யா... ஹஹஹஹா
அய்யா...
ஆதவனை கையாலே மறைப்பான் எவன்
அய்யா...
ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா...
இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன்
அய்யா... ஹஹஹஹா

மீன் கொண்ட வானத்தில்
மீன் கொண்ட வானத்தில்
மின் கொண்ட முகிலாக
மின் கொண்ட முகிலாக
சூழாலி ஒலியெல்லாம்
சூழாலி ஒலியெல்லாம்
சூழ் கொண்ட சங்காக
சூழ் கொண்ட சங்காக
கான் கொண்ட மரமெல்லாம்
கான் கொண்ட மரமெல்லாம்
தான் கொண்ட விதையாக
தான் கொண்ட விதையாக
மிசை வீசும் காற்றை
மிசை வீசும் காற்றை
தேன் இசையாக்கும் குழலாக

மீன் கொண்ட வானத்தில்
மின் கொண்ட முகிலாக
சூழாலி ஒலியெல்லாம்
சூழ் கொண்ட சங்காக
கான் கொண்ட மரமெல்லாம்
தான் கொண்ட விதையாக
மிசை வீசும் காற்றை
தேன் இசையாக்கும் குழலாக

சில்லு தீர்ந்து சிலையாக
சிதறடிக்கும் புயலாக
ஆர்பரிக்கும் அலையாக
மீண்டுயிர்த்து நிலையாக
தீண்டாத தீ குச்சி
குளிரையும் நெருப்பாக
உயிர் வரையறை
உன் சிறையறையேனும்
பழங்கதை தூளாக

ஆதவனை கையாலே மறைப்பான்
எவன் அய்யா...
ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா...
இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன்
அய்யா... ஹஹஹஹா

அய்யா...
ஆதவனை கையாலே மறைப்பான் எவன்
அய்யா...
ஆதியின் நோக்கத்தை அறிந்தான் எவன்
அய்யா...
இறப்பை கடந்து இருளை கிழித்து
விடியல் தந்து எழுவான் இவன்
அய்யா... ஹஹஹஹா



Credits
Writer(s): Govind Vasantha, Thiagarajan Kumararaja
Lyrics powered by www.musixmatch.com

Link