Medhakavitta Medhakavitta - Studio

ஆ ஆ

என்ன மெதக்கவிட்டா மெதக்கவிட்டா
காத்து குயிலானேன்
உன் நட்புக்குள்ள வானம் கட்டி
கூட்டு குயில் ஆனேன்

என்ன மெதக்கவிட்டா மெதக்கவிட்டா
பாட்டு குழலானேன்
ஒரு ஊரே கேட்கும்
பேச்சுக்காரி கீச்சுக் குரலானேன்

உன்ன பொல்லாத தீயென பாத்தேன்
என்ன அன்பால நீ தொட தோத்தேன்
நேத்து இல்லாதது இப்ப என்னோடது
என் உலகம் புதுசாச்சு

என்ன அஞ்சாறு கடல் அடிச்சாலும்
நான் தள்ளாடி அசைஞ்சிட மாட்டேன்
நீ யாருக்குனோ விட்ட கண்ணீர் துளி
என்ன அடிச்சி போயாச்சு

சின்ன கண்ணாடி பொண்ணாக நிக்காதடி
கண்ணு முன்னாடி துப்பாக்கி வெக்காதடி
Hormoneல் ON button தட்டாதடி
காதல் அம்புக்கு வீண் வேல வெக்காதடி

சொல்லாம நீ நொழஞ்சி ஒட்டாதடி
என் மௌனத்தில் நீ குதிச்சி கத்தாதடி
வத்தாத சிரிப்புல எத்தாதடி
நம்ம நட்போடு முடிப்பது பத்தாதடி

சும்மாவே சுத்தி வந்த
என்னோட புத்திக்குள்ள
ஐந்நூறு டன் ஆச கொட்டாதடி
நெஞ்சோட ஆழத்துக்கு நீ போய்
சேரனும் னு உள் நீச்சல் போடாதடி

என்ன மெதக்கவிட்டா
மெதக்க விட்டா காத்து
குயிலானேன் உன் காதல் பட்ட
காதுக்குள்ள மாட்டி துகளானேன்

என்ன மெதக்கவிட்டா மெதக்கவிட்டா
பாட்டு குழலானேன்
நீ ஓர கண்ணில் சோலி சுத்த
காட்டு சுழலானேன்

ராத்திரியில் உன் திசை
பாத்துதான் தூங்குறேன்
மூச்சு விடும் சாக்கில் உன்
வாசன வாங்குறேன்

சாய்ச்சுகிட்டு வெண்ணிலா
காட்டதான் ஏங்குறேன்
காதல் குட்டி கிறுக்கனா
ஆக்குதே தாங்குறேன்

எங்கும் இல்லாத வேதியலாக
ஈர மண்ணோட தீப்பிடிச்சாச்சு
என் கில்லாடி நண்பன உள்ளார ஏத்தியும்
இதயம் லேசாச்சு

சின்ன கண்ணாடி
பொண்ணாக நிக்காதடி
கண்ணு முன்னாடி
துப்பாக்கி வெக்காதடி
ஹார்மோனில் ஆன் பட்டன்
தட்டாதடி காதல் அம்புக்கு
வீண் வேல வெக்காதடி

சொல்லாம நீ நொழஞ்சி ஒட்டாதடி
என் மௌனத்தில் நீ குதிச்சி கத்தாதடி
வத்தாத சிரிப்புல எத்தாதடி
நம்ம நட்போடு முடிப்பது பத்தாதடி

சும்மாவே சுத்தி வந்த
என்னோட புத்திக்குள்ள
ஐந்நூறு டன் ஆச கொட்டாதடி
நெஞ்சோட ஆழத்துக்கு நீ போய் சேரனும் னு
உள் நீச்சல் போடாதடி

என்ன மெதக்கவிட்டா மெதக்கவிட்டா
காத்து குயிலானேன்
உன் காதல் பட்ட காதுக்குள்ள
மாட்டி துகளானேன்

என்ன மெதக்கவிட்டா மெதக்கவிட்டா
பாட்டு குழலானேன்
நீ ஓர கண்ணில் சோலி சுத்த
காட்டு சுழலானேன்



Credits
Writer(s): S.s Thaman, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link