Akkini

மேகம் போன்ற சாட்சிகளே
எம்மை முன் சென்ற சுத்தர்களே
பரலோகத்தின் வீதிகளில்
எங்கள் ஓட்டத்தை காண்பவரே
இவ்வுலகென்னை மயக்கயிலே
சாத்தானின் சதிகள் வலைக்கையிலே
உங்கள் சாட்சியை நினைத்திடுவேன்
உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்

அக்கினியுள்ளே வேகவில்லை
தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
கடும்புயல் அடித்தும் அசையவில்லை
உன்னத தேவனின் சீஷர்களே

முட்ச்செயின் மோசேயே தேவ மகிமையை கண்டவனே
பார்வோனின் அரண்மனை வாழ்க்கையையும் குப்பையாய் எண்ணின சீமானே
நிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனே
உம்மை போல் நானும் ஆகனுமே அவரின் நண்பனாய் மாறனுமே

அக்கினியுள்ளே வேகவில்லை
தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
கடும்புயல் அடித்தும் அசையவில்லை
உன்னத தேவனின் சீஷர்களே

சூழல் காற்றின் எலியாவே யேசபேலை வென்றவனே
பாகாலை வெட்கப்படுத்தி சாவலை வென்றவனே
கர்மேலின் மேல் அக்கினியை இறக்கி கர்த்தரே தேவன் என்று முழங்கி
இவ்வுலகே பின் மாறினாலும் தேவனுக்காக நின்றவனே

அக்கினியுள்ளே வேகவில்லை
தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
கடும்புயல் அடித்தும் அசையவில்லை
உன்னத தேவனின் சீஷர்களே-3



Credits
Writer(s): Premji Ebenezer
Lyrics powered by www.musixmatch.com

Link