Sirage Illatha Poonkuruvi

சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு ஒன்றை இங்கு ஆழ்கடல் புடிக்கிறது

உதய காலமே இரவு ஆனதே
யார் செய்த பாவமடி?
விழுது இன்றுதான் வேரை தின்றதே
யார் தந்த சாபமடி?

சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு ஒன்றை இங்கு ஆழ்கடல் புடிக்கிறது

ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆ

ஆஆஆஆ... ஆஆஆஆ

வாசல் இல்லாத வீட்டிலே
கோலம் நீ போட்டது
பூக்கள் இல்லாத சோலையில்
வாசம் நீ கேட்டது

இந்த சோகம் யார் கொடுத்த சாபம் தொடருமே
இந்தத் துயரத்தின் முடிவேதம்மா?

நடு இரவில் வெயில் அடிக்க
மனதில் புயல் அடிக்க
வேறென்ன விதிதானம்மா
கட்டிய தாலிக்கோ ஆயுளில் குறையடி
கனவுகள் அறுந்ததடி
புகுந்த வீட்டுக்கோ புத்தியில் குறையடி
போகட்டும் மறந்திடடி

சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு ஒன்றை இங்கு ஆழ்கடல் புடிக்கிறது

ஆஆஆஆ அஅஅஅ
ஆஆஆஆ அஅஅஅ

பாதை வழி மாறி போகுமோ?
பயணம் முடிந்துவிடுமோ?
சோகம் உள் நெஞ்சில் மூழ்குமோ?
சொந்தம் கை தருமோ?

அடி மாலை நீ தொடுக்கும்
வேலை வரும் போது
பூக்கள் சருகானதே

இங்கு உருகும் மெழுகொன்று
சுடரும் வரம் கொண்டு
புயலுடன் தடுமாறுதே
பாலுடன் மென்மையாய் கலந்த சோகங்கள்
பெண்மைக்கு நிறந்தரமா?
மானுட வேதங்கள் யாவிலும் வேதங்கள்
உண்மைக்கு வழி விடுமா?

சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு ஒன்றை இங்கு ஆழ்கடல் புடிக்கிறது

உதய காலமே இரவு ஆனதே
யார் செய்த பாவமடி?
விழுது இன்றுதான் வேரை தின்றதே
யார் தந்த சாபமடி?

சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு ஒன்றை இங்கு ஆழ்கடல் புடிக்கிறது

Credits
Writer(s): Raj, Vaasan
Lyrics powered by www.musixmatch.com

Link