Yaavum Yaavumey

பெண்: யாவும் யாவுமே நீயானாய்
காதல் நந்தலாலா
தேவ தேவனாய் நீயானாய்
ராதை வந்ததாலா

ஆண்: நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா

பெண்: ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா

ஆண்: பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா

பெண்: என்னில் வேறு...
ஏக்கமில்லையே
நீதான் கண்ணா...
மொத்த வாழ்க்கையே
சுகமடா...

ஆண்: நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா... ஹேய்...

ஆண்: தம் தம் இருதயம்
புதியதா
சந்தம் ஒலித்ததா
நம் நம் ஆனந்தம்
இணைந்ததால்
பந்தம் விளைந்ததா

பெண்: தாலாட்டி தலை நீவி
தாங்கும் தாய் மடி நீ
மூழ்காமல் நான் பெற்ற
மூத்த பிள்ளையே நீ
சீர் வாங்கினேன்
வாழ்க்கையை காதலா

ஆண்: நாளும் நாளுமே நன் நாளா
காதல் நந்தலாலா
தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா... ஹேய்...

பெண்: உலகம் தொடங்குதே உன்னிலே
பாதம் வையடா
வானம் திறந்ததே உனக்கென
என்றும் வெல்லடா

ஆண்: நீ ஏற என் தோள் ஏணி
வானம் தொட்டு வா நீ
நீ கோடி விதை தூவி
தோட்டமாகும் பூமி
பூங்காற்றிலே கழுவலாம் இதயமே...

பெண்: யாவும் யாவுமே நீயானாய்
காதல் நந்தலாலா

ஆண்: தேவ தேவியாய் நீ ஆனாய்
கண்ணன் வந்ததாலா...

பெண்: ஓர் ஆயிரம் வாரணம் சூழவா
ஓர் இதழ் தாமரை சூடவா

ஆண்: பூசிய மை தடம் தீண்டவா
பூமகள் கைத்தளம் ஏந்தவா...

பெண்: என்னில் வேறு...
ஏக்கமில்லையே
நீதான் கண்ணா...
மொத்த வாழ்க்கையே
சுகமடா...



Credits
Writer(s): Ilaiyaraaja, Jayaraam Arp
Lyrics powered by www.musixmatch.com

Link