Kangalai Thuthuvitten

கண்களை தூதுவிட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா

ராமனை தள்ளி வைத்த சீதையும் நான் அல்லவா
மன்னித்து பூ வழங்கு மங்கள பொன் மன்னவா
விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தம் என்று
சொல்லு சொல்லை, சொல்லை சொல்லு

கண்களை தூதுவிட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா

மன்னவனே உன் மடியில் காலம் எல்லாம் சாய்ந்திருப்பேன்
கைவிலக்க நேரமில்லை கண்மணிக்குள் சேர்ந்திருப்பேன்
மன்னவனே உன் மடியில் காலம் எல்லாம் சாய்ந்திருப்பேன்
கைவிலக்க நேரமில்லை கண்மணிக்குள் சேர்ந்திருப்பேன்
ஏணியிலே ஏணி கொண்டு வான்வெளியில் பூ பறிப்பேன்
ஏழு ஜென்மம் உள்ளதெல்லாம்
இந்த ஜென்மம் வாழ்ந்திருப்பேன்

விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தம் என்று
சொல்லு சொல்லை, சொல்லை சொல்லு

கண்களை தூதுவிட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா

போனதெல்லாம் போகட்டுமே பூமகளை வாழவிடு
பூமகளை வாழ வைத்து பொன் மகனே வாழ்ந்துவிடு
போனதெல்லாம் போகட்டுமே பூமகளை வாழவிடு
பூமகளை வாழ வைத்து பொன் மகனே வாழ்ந்துவிடு
கண்களுக்குள் உன்னை வைத்து காப்பது தான் என் கடமை
கட்டில் என்னும் ராஜ்ஜியத்தில் காதலி நான் உன் அடிமை

விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தம் என்று
சொல்லு சொல்லை, சொல்லை சொல்லு

கண்களை தூதுவிட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா

ராமனை தள்ளி வைத்த சீதையும் நான் அல்லவா
மன்னித்து பூ வழங்கு மங்கள பொன் மன்னவா
விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தம் என்று
சொல்லு சொல்லை, சொல்லை சொல்லு

Credits
Writer(s): Vairamuthu, Vidyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link