Naadodi Pattu Paada

நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்
நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்

இருபது வயதில் வருவது தானா காதல்
அறுபது வரையில் தொடர்வது தானே காதல்
சிரிக்கிற போது சிரிப்பது தானா காதல்
அழுகிற போது ஆறுதல் தானே காதல் ஹேய்

காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
காதலை நான் பாடவா ஹேய்
பூவிலே தேன் தேடவா

கண்ணை மெல்ல மூடி சாய்ந்துகொள்ளும் போது
மடியாக வேண்டுமே
தட்டுதடுமாறி சோர்ந்து விழும் போது
பிடியாக வேண்டுமே
உன் உள்ளம் நான் கண்டு
என் உள்ளம் நீ கண்டு
உனக்காக நான் உண்டு
என்று வாழும் காதல் தானே காதல்
மலர் விட்டு மலரை தாவுவதான் அல்ல காதல்
ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல் ஹேய்
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
ஏஏ... ஏ... ஏஏ... ஏ...
தந்தன தானே தானனே
ஹேய்... தந்தன தானே தானனே

கங்கை நதி என்ன காவேரி என்ன
எல்லாமே பெண்மையே
நம்மை இங்கு நாளும் தங்குகிற பூமி
அது கூட பெண்மையே
நாடாளும் ஆணுக்கும்
வீடாள பெண் வேண்டும்
கடல் போன்ற வாழ்வினில்
கலங்கரை விளக்கம் தானே பெண்மை
பெண்ணிடம் மனதை கொடுத்து விட்டாலே போதும்
பௌர்ணமிதானே வாழ்வின் எந்த நாளும் ஹேய்

காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா

நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்



Credits
Writer(s): S. P. Balasubrahmanyam
Lyrics powered by www.musixmatch.com

Link