Nee Sirichalum

நீ சிரிச்சாலும்
என்ன மொறைச்சலும்
தினம் நினைச்சாலும்
சுட்டு எரிச்சாலும்
நெஞ்சில் இனிச்சாலும்
இல்ல வலிச்சாலும்
கையில் அனைச்சாலும்
மண்ணில் பொதைச்சாலும்

ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடு தான் சுத்தி
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி
நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமலே திக்கி
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி

நீ சிரிச்சாலும்
என்ன மொறைச்சலும்
தினம் நினைச்சாலும்
சுட்டு எரிச்சாலும்

புதைத்து வைத்த காதலை பூக்களுக்குள் தேடவா
கூட வந்த ஆசையை கூந்தலுக்குள் சூட வா
நெஞ்சிருக்கும் வரைக்குமே உன் நினைவு இருக்குமே
காற்றிலா வெளியிலே காத்து கிடக்கிறேன் நான்

நீ மௌனமாகவே நடந்து போகிறாய் காயம் செய்து கொண்டே
உன்னில் காதல் இல்லை என தோழி போலவே என்னை மாற்றிக்கொண்டேன்

இவன் தோழில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன
இவன் தோழில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன

தினம் உன்ன நெனச்சே, இரு கண்ண முழிச்சேன்
உன்னை ஒட்டிக் அனைச்சே, கனவுல கட்டிப் புடிச்சேன்
உன் கண்ணு முழியில் என்ன கண்டு பிடிச்சேன்
உன்ன மட்டும் நெனச்சேன் தினம் செத்து பொழைச்சேன்

கை வீசும் காதலே என்ன தாண்டியே எங்கு செல்கிறாயோ
இந்த பாலை வெய்யிலில் பார்வை இன்றியே என்னை கொல்கிறாயோ

இவன் தோழில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன

நீ சிரிச்சாலும்
என்ன மொறைச்சலும்
தினம் நினைச்சாலும்
சுட்டு எரிச்சாலும்
நெஞ்சில் இனிச்சாலும்
இல்ல வலிச்சாலும்
கையில் அனைச்சாலும்
மண்ணில் பொதைச்சாலும்

ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடு தான் சுத்தி
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி
நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமல் திக்கி
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி



Credits
Writer(s): Pa Vijay, Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link