Yaaru Iva

யாரு இவ அடடா யாரு இவ
யாரு இவ அடடா யாரு இவ

அவ வானவில்லா வளைஞ்சி நெளிஞ்சி
வசியம் பண்ணி போறா
அவ ஊரு பேரு சொல்லாமலே
உசுர வாங்கி போறா
அவ கண்ணுக்குள்ள காந்தம் வெச்சி
என்னை இழுத்து போறா
இவ திருவாரூர் தேரா
இவ தண்ணியில்லா மீன போல
தவிக்க விட்டு போறா
என்னை தவிக்க விட்டு போறா

உன் மனைவியா
நான் வருவேனா
நீ சொதப்புனா
உன்னை நான் விடுவேனா
சத்தியமா சொல்லுறேன்
தாலி ஒண்ணு கட்டுடா
தடுக்க யாரு வந்தாலும்
தாறுமாறா வெட்டுடா

யாரு இவ அடடா யாரு இவ
யாரு இவ அடடா யாரு இவ

நிலவென்று தரையில் வந்து
நடக்குது எதிரில் நின்று
எனக்குன்னு பொறந்தவ தான்
என்று நானும் சொன்னேன்டி

திட்டி திட்டி பேசினாலும்
தேனாக இனிக்குதடா
குட்டி போட்ட பூனைய போல்
சுத்தி சுத்தி வந்தேன்டா

ஊரே எதித்தாலும் எனக்கு நீ வேணும்
உசிரே போனாலும் நீ வேணும்டி
உலகே அழிஞ்சாலும் நிலவே இருண்டாலும்
நாம ஒண்ணாக வாழ்வோமடி

உன் மனைவியா
நான் வருவேனா
நீ சொதப்புனா
உன்னை நான் விடுவேனா
சத்தியமா சொல்லுறேன்
தாலி ஒண்ணு கட்டுடா
தடுக்க யாரு வந்தாலும்
தாறுமாறா வெட்டுடா

யாரு இவ அடடா யாரு இவ
யாரு இவ அடடா யாரு இவ

Whatsapp பிலே நீ வந்தா
பெண்களுக்கு கொண்டாட்டம்
வராத வந்திடாதே
வலைதளமே ஸ்தம்பிக்கும்

வள்ளுவனும் இருந்திருந்தா
வாசுகியை மறந்துவிட்டு
உன்னையே புகழ்ந்து கொண்டு
இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருப்பான்

வாகா எல்லைக்குள் படவா நான் போனா
ரெண்டு நாட்டுக்கும் பகையே இல்ல
சாகா வரம் வேண்டும் சாமி தரவேண்டும்
மீண்டும் ஒரு ஜென்மம் தேவையில்ல

உன் கணவனா
நான் வருவேனா
நீ சொதப்புனா
உன்னை நான் விடுவேனா
சத்தியமா சொல்லுறேன்
தாலி வாங்கி கட்டுவேன்
தடுக்க யாரும் வந்தாலும்
தாறுமாறா வெட்டுவேன்

யாரு இவன் அடடா யாரு இவன்
யாரு இவன் அடடா யாரு இவன்

நான் பள்ளிக்கூடம் படிக்கையிலே
ஒரு பார்வை பார்த்தான்
நான் பருவம் அடைந்த போது
என்னை படி தாண்ட வெச்சான்

இவ கண்ணுக்குள்ளே காந்தம் வெச்சி
என்னை இழுத்து போறா
இவ திருவாரூர் தேரா
இவ தண்ணியில்லா மீன போல
தவிக்க விட்டு போறா
என்னை தவிக்க விட்டு போறா

உன் மனைவியா
நான் வருவேனா
நீ சொதப்புனா
உன்னை நான் விடுவேனா

சத்தியமா சொல்லுறோம்
தாலி நாம கட்டுவோம்
தடுக்க யாரு வந்தாலும்
தாறுமாறா வெட்டுவோம்



Credits
Writer(s): Thiraivannan, N.r. Ragunanthan
Lyrics powered by www.musixmatch.com

Link