Sila Naal

சில நாள் வாழும்
உறவும் உண்டு
பல நாள் வாழும்
உறவும் உண்டு

காண்பது எல்லாம் நிஜமில்லை
நிரந்தரம் என்றே சொல் இல்லை

கனவுகள் போதும்
அழகிய கோலம்
கரைந்தே தீரும்
அறிவாயா

நிஜமென தோன்றும்
உறவுகள் யாவும்
நிழல் என நீங்கும்
உணர்வாயா
சகி...
சகி...

எது வரை ஆசை
அதுவரை வாழ்க்கை
எது வரை வாழ்க்கை
அதுவரை ஆசை

ஒரு சில நேரம்
உறவுகள் உண்மை
ஒரு சில நேரம்
உலகம் பொம்மை

வளைந்தால்தானே
நதியும் விரியும்
வலித்தால்தானே
வாழ்க்கை புரியும்...
புரியும்...

ச ரி க ப ரி க ச ரி த ச
ப த ச ரி க
ச ரி க ப ரி க ச ரி த ச
ப த ச ரி க...
நி ச ரி ம த நி ரி ச நி த
பமரி ப மா
ச ரி க ப ச ரே க ப ச ரே கா...
ச ரி க ப த ச ரி க ரி ச
த ப க ரி க
ப நி ச க ம ப நி ச த நி ப
ப ம க ரி மா...
ச ரி க ப ம ம ப த நி கா...

காண்பது எல்லாம் நிஜமில்லை
நிரந்தரம் என்றே சொல் இல்லை

சில நாள் வாழும்
உறவும் உண்டு
பல நாள் வாழும்
உறவும் உண்டு
சகி...



Credits
Writer(s): Mohan Rajan, Nivas K. Prasanna
Lyrics powered by www.musixmatch.com

Link