Jingu Chikka (From "Mynaa")

ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
எங்கே நீயும் கௌம்பிப்போற சொல்லு வேகமா
நானும் தொணைக்கி வர்றேன் பேசிக்கிட்டே கண்ணே போவோமா

ஜிம் ஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான்
ஜிம் ஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான்

ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க
நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம்
எட்டி நகருங்க

ஜிம் ஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான்
ஜிம் ஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான்

நாடு ரொம்ப கெட்டுப்போச்சி
நல்லதெல்லாம் செத்துப்போச்சி
கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா
நீயும் கூடாதேன்னு சொல்லாதேடி குட்டி கோகிலா ஹேய்

ராயங்கூரு மூனு மயிலு
நாங்குனேரி நூறு மயிலு
சாயங்கால வேளையில சேலை எதுக்கடி
சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் வெலக்கடி

ஜிம் ஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான்
ஜிம் ஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான்

சீராலூரு அஞ்சு மயிலு
சிதம்பரமோ அம்பது மயிலு
வேலூருல ஏற்கனவே கம்பி என்னுன
அந்த வெட்கக்கேட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற

ஜிம் ஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான்
ஜிம் ஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான்

சிங்கிப்பட்டி ஒன்பது மயிலு
சிங்கப்பூரு எத்தன மயிலு
அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி
உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி
ஹேய்... ஹேய்... ஹேய்... ஹேய்...

பூதலூரு ஏழு மயிலு
பூண்டிக்கோயிலு நாலு மயிலு
காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா

கும்பகோணம் ஆறு மயிலு
குளித்தலையோ நாலு மயிலு
ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல
உங்க அப்பன் அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல

ஜிம் ஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான்
ஜிம் ஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான்

மாயவரம் எட்டு மயிலு
மன்னார்குடி பத்து மயிலு
எறைக்காத கேணியில நீரு ஏதடி
என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி
அடியே...

ஜிம் ஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான்
ஜிம் ஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான் க்குஜிக்கான்

Credits
Writer(s): D Imman, Yuga Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link