Mozhi

உலகம் உரைத்த மொழி இது
எந்நாளும் அழியா தமிழ் இது
சொல் வேகம் என் ராகம்
இது அம்மை அப்பன் தந்தது
கவி கொள்வேன் வருவேன் தருவேன் படைப்பேன் தமிழை போற்றி செல்வேன்
யாம் பிறந்து மடிந்து மீண்டும் பிறப்பேன் தாய் மொழி என்றும் மறவா இருப்பேன்
சரித்திரம் மறவாதே தமிழா
தமிழை தாழ்த்தாதே தமிழா
தரணி அது முழுவதும் முழுதாய் படர்ந்த வீர கூட்டம் நாமடா
கவிப்பாட நானும் வரவா
கதைகள் பல உண்டு தரவா
மொழி அது இனத்தின் அடையாளம் காத்துக்கொள்வாய் நீயும் தமிழா
அன்னைத் தமிழே வணக்கம்
அடியேன் என்றும் உன் அடி சரணம்
மொழிக்கது வேண்டும் கவணம்
என் தாய் தமிழே வையம் ஆளும்
வென்ற கொடி பல உண்டு
பல கதைகளை சொல்லும் கல் வெட்டு
கவிப் பாடும் என் மெட்டு
வெறும் கர்ப்பணை அல்ல நீ கேளு
தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்கொரு குணம் உண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
மனித அன்பே அவனது வழியாகும்
விண்ணும் மண்ணும் போற்றிட வேண்டும்
போகும் வரை புகழ் சேர்த்திட வேண்டும்
மடிந்து போனாலும்
மறவாத மண்ணில் நீயும் வாழ்ந்திடு என்றும்

காப்பியம் கண்ட மொழி எங்கே
என் வள்ளுவன் தந்த தமிழ் எங்கே
கம்பன் பாடிய கவி எங்கே
எம் பாரதி பெற்ற சொல் எங்கே
கவிகள் சொன்ன மொழி எங்கே
உலக முது மொழி தமிழ் எங்கே
உலகம் உரைத்த இனம் எங்கே
எம் இனம் இது மறக்கும் தாய் மொழி எங்கே
மனிதா உன் மானம் விலை போகும் நேரம் அட கொஞ்சம்
மரியாதை இழந்து வாழாதே நேர் பார்வை வேண்டும் அதிகம்
உன் பிள்ளைக்கு தமிழ் கற்றுக்கொடு அவமானம் அல்ல
உன் அடையாளம் அதை அழுத்தி சொல்லு நேரம் அதிகம் இல்ல
என் தாய் மொழி பாடி வருவேன்
தமிழ் எங்கும் பரவ செய்வேன்
தமிழ் இட்டு மடிந்து செல்வேன்
என் சாம்பலிலும் தமிழ் மனக்க செய்வேன்
அறம் கொண்ட கதையெல்லாம் வெறும் கட்டுக் கதையாச்சு
அட ஆரிய கதைகள் மெல்ல புகுந்து அறியாமை பெருகி போச்சு
பல தேசம் தாண்டியாச்சு பழங்குடி என்ற பேரும் போச்சு
ஒற்றுமை மறந்த பேச்சு வந்தவர் கைகள் ஓங்கியாச்சு
வந்தவரை வாழ வைத்த கூட்டமடா
வரலாறு என்றும் மடிந்து போகாது கீழடி வம்சமடா



Credits
Writer(s): Mizter Rap Kavi
Lyrics powered by www.musixmatch.com

Link