Arivum Anbum

பொது நலம் என்பது
தனி மனிதன் செய்வதே
தன் நலம் என்பதும்
தனி நபர்கள் செய்வதே

பொது நலம் என்பது
தனி மனிதன் செய்வதே
தன் நலம் என்பதும்
தனி நபர்கள் செய்வதே

அலாதி அன்பிருந்தால்...
அனாதை யாருமில்லை...
அடாத துயர் வரினும்...
விடாது வென்றிடுவோம்

அகண்ட பாழ் வெளியில்...
ஓர் அணுவாம் நம்முலகு
அதில் நீரே பெருமளவு
நாம் அதிலும் சிறிதளவே

சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு

சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு

உலகிலும் பெரியது(உலகிலும் பெரியது)
நம் அகம் வாழ் அன்புதான்(நம் அகம் வாழ் அன்புதான்)
உலகிலும் பெரியது ஓஹோ...
நம் அகம் வாழ் அன்புதான் ஓஹோ...

புது கண்டம் புது நாடு
என வென்றார் பல மன்னர்
அவர் எந்நாளும் எய்தாததை

சிலர் பண்பால் உள்ளன்பால்
உடன் வாழ்ந்து உயிர் நீத்து
அதன் பின்னாலும் சாகாத
உணர்வாகி உயிராகிறாய்

சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு

சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு

அழிவின்றி வாழ்வது (அழிவின்றி வாழ்வது)
நம் அறிவும் அன்புமே (நம் அறிவும் அன்புமே)
அழிவின்றி வாழ்வது (அழிவின்றி வாழ்வது)
நம் அறிவும் அன்புமே

சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு

சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு

அழிவின்றி வாழ்வது
நம் அறிவும் அன்புமே...



Credits
Writer(s): Mohamaad Ghibran Ghanesh Balaji, Kamal Haasan
Lyrics powered by www.musixmatch.com

Link