Kooppitta Malar Thedi (From "Vasanthakaala Paravai")

கூப்பிட்டால் மலர் தேடி வண்டு வரும்
தேதி குறிபிட்டால் கொய்யாவை கிளிகள் கொத்தும்
சிந்தித்தால் வருகின்ற கவிதை போலே
கண்கள் சந்தித்தால் வர வேண்டும் உண்மைக் காதல்

செம்பருத்தி செம்பருத்தி
பூவைப்போல பெண் ஒருத்தி
காதலன தேடி வந்தால்
கண்ணில் வண்ண மை எழுதி
மேலும் கீழும் ஆடுகின்ற நூல் இடை தான்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம் தான்
நாள் எல்லாம் மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம் தான்

செம்பருத்தி செம்பருத்தி
பூவைப்போல பெண் ஒருத்தி

பள்ளியறை நான் தானே
பாரிஜாத பூந்தேனே
கல்வி போல் காதலை
கற்று தர வந்தேனே

கற்றுக் கொடு கண்ணாலே
கன்னி மயில் உன்னாலே
என்னவோ என்னவோ
இன்பங்களை கண்டாலே

பருவ கனவு பிறக்கும் போழுது
இறகு முளைத்து பறக்கும் மனது

உணர்ச்சி அலைகள் திரண்டு திரண்டு
கரையை கடக்கும் நதிகள் இரண்டு

இமை தானே கண்ணை சேர்ந்தது
எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்தது

செம்பருத்தி செம்பருத்தி
பூவைப்போல பெண் ஒருத்தி

எப்பொழுதும் எந்நாளும்
உன்னுடைய பூபாளம்
இல்லையேல் ஏங்குமே
என்னுடைய ஆகாயம்

ஜன்னல் வழி நாள் தோறும்
மின்னல் ஒன்று கை காட்டும்
அம்மம்மா என்னை தான்
ஆசைகளில் நீராட்டும்

எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
இளமை தொடங்கி முதுமை வரைக்கும்

இரவும் பகலும் உறவை வளர்க்கும்
இடையில் இருக்கும் தடையை தகர்க்கும்
விலாகது சொந்தமானது
தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது

செம்பருத்தி செம்பருத்தி
பூவைப்போல பெண் ஒருத்தி
காதலன தேடி வந்தாள்
கண்ணில் வண்ண மை எழுதி

மார்பின் மீது கண் மயங்கி சாய்ந்திடத்தான்
மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான்
கை தொடும் மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான்

செம்பருத்தி செம்பருத்தி
பூவைப்போல பெண் ஒருத்தி



Credits
Writer(s): Valee, Deva
Lyrics powered by www.musixmatch.com

Link