(مُنَاجَاتْ (صَلَاةٌ سَلَامٌ عَلىٰ مَنْ رَجَانَا

صَلَاةٌ سَلَامٌ عَلىٰ مَنْ رَجَانَا
نَنَالُ دُعَانَا بِجَاهِ الْحَبِيْبِ

கரம் ஏந்துகின்றோம்
கொடை வேண்டுகின்றோம்
சிரம் தாழ்த்தி கேட்கும்
துஆ ஏற்றருள்வாய்

மலை போன்ற பாவப்
பிழைகள் பொறுப்பாய்
மனம் தன்னில் மகிழ்வை
மழைப்போல் விதைப்பாய்
உனை அன்றி யார் முன்
குறைகள் பகர்வோம்
இலாஹி... உன் முன்னில்
துஆ வேண்டுகின்றோம்

வறியோர்க்கு செல்வச்
செழிப்பை அருள்வாய்
கொடும் நோய்கள் போக்கி
நலம் தந்து காப்பாய்
படும் இன்னல் நீங்கி
வளம் கூடி வாழ
இலாஹி... பணிந்தே
துஆ வேண்டுகின்றோம்

வயது கடந்தும்
துணை சேர்ந்திடாமல்
மனம் வாடும் பேர்க்கு
இணை தந்து சேர்ப்பாய்
குழந்தைகள் பேறு
நிறைவாய் வழங்க
இலாஹி... பணிந்தே
துஆ வேண்டுகின்றோம்

பொருள் ஏதுமில்லா
நலிந்தோரும் காண
அருள் கொண்டழைத்தே
ஹரம் தன்னில் சேர்ப்பாய்
மதீனாவின் காட்சி
விரைவாகக் காண
இலாஹி... பணிந்தே
துஆ வேண்டுகின்றோம்

எமின் ஊரில் நாட்டில்
பயம் இன்றி வாழ
திகைக்கும் எம் நெஞ்சில்
ஸுகூனை நிறைப்பாய்
அறம் கொண்டு ஆளும்
உயர் ஆட்சி மேவ
இலாஹி... பணிந்தே
துஆ வேண்டுகின்றோம்

இறைவா உன் திருவாம்
ஹபீபின் பொருட்டால்
ஜஹராவின் பொருட்டால்
ஹஸனைன் பொருட்டால்
நல் அஸ்ஹாப் இமாம்கள்
இறை நேசர் பொருட்டால்
இறைஞ்சல்கள் யாவும்
உகந்தேற்க வேண்டும்
உயர்வாம் லிகாவின்
வரம் வேண்டுகின்றோம்



Credits
Writer(s): Ahmad Faheemi
Lyrics powered by www.musixmatch.com

Link