Rathathiriku Konjam (From "Kaaleyum Neeye Maaleyum Neeye")

ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்

சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன் எல்லாமே
நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன் நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்

(இசை)
ஆண்: மாணிக்கத் தொட்டில் கட்டி
மெத்தைதான்விரிச்சே தாலாட்டு பாட்டு படிச்சே நாளும் கண்ணு முழிச்சே
மாராப்பில் என்னை மூடி பாலைத்தான் கொடுத்தே
ஆளாக்கி என்னை வளர்த்தே வாழ உயிர் கொடுத்தே
காலம் செய்த கோலமிது குத்தத்தை யார் மேல் சொல்லுவது

அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னைத்தான் யார் கிட்ட சொல்லி அழுவேன்
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
(இசை)
கண்கெட்டுப் போனபின்பு தெய்வத்தை அறிஞ்சு
எட்டத்தில் நின்னு துதிச்சேன் ஏங்கி நெஞ்சு கொதிச்சேன்
கைவிட்டுப் போன செல்வம் மீண்டும்தான்
வருமா காயங்கள் ஆறிவிடுமா காலம் மாறி வருமா
இருண்ட வானம் வெளுக்குமா நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா
இருண்ட வானம் வெளுக்குமா நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா
அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னைத்தான் யார் கிட்ட சொல்லி அழுவேன்
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன் எல்லாமே
நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன் நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்

Credits
Writer(s): Valee, Devendran
Lyrics powered by www.musixmatch.com

Link