Yesuvae Kirubasanapathiyae

காசினியில் உன்னை அன்றி
தாசன் எனக் காதரவு
கண்டிலேன் சருவ வல்ல
மண்டலாதிபா
காசினியில் உன்னை அன்றி
தாசன் எனக் காதரவு
கண்டிலேன் சருவ வல்ல
மண்டலாதிபா
நேசமாய் ஏழைக்கிரங்கி
மோசம் அணுகாது காத்து
நித்தனே எனைத் திருத்தி
வைத்தருள் புத்தி வருத்தி
இயேசுவே கிரு பாசனப் பதியே
கெட்ட இழிஞன் எனை மீட்டருள்
இயேசுவே கிரு பாசனப் பதியே

சிறைப்படுத்தினவற்றைச்
சிறையாக்கி விட்ட அதி
தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே
சிறைப்படுத்தினவற்றைச்
சிறையாக்கி விட்ட அதி
தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே
குறை ஏதுனை அண்டினோர்க்கிறைவா எனைச் சதிக்கும்
குற்றங்கள் அறவே தீர்த்து
முற்றுமுடியக் கண்பார்த்து
இயேசுவே கிரு பாசனப் பதியே
கெட்ட இழிஞன் எனை மீட்டருள்
இயேசுவே கிரு பாசனப் பதியே

பொல்லா உலகமதில்
நல்லார் எவரும் இல்லை
புண்ணியனே உன் சரணம்
நண்ணி அண்டினேன்
பொல்லா உலகமதில்
நல்லார் எவரும் இல்லை
புண்ணியனே உன் சரணம்
நண்ணி அண்டினேன்

எல்லார்க்குள் எல்லாம் நீ
அல்லோ எனக்குதவி
இந்நாள் அருள் புரிந்து
உன் ஆவியைச் சொரிந்து
இயேசுவே கிரு பாசனப் பதியே
கெட்ட இழிஞன் எனை மீட்டருள்
இயேசுவே கிரு பாசனப் பதியே



Credits
Writer(s): John Palmer
Lyrics powered by www.musixmatch.com

Link