Oru Manam (From "Dhruva Natchathiram")

Key: D Major
Time signature: 2 4
BPM: 76
Song: ஒரு மனம்
Love ballad

ஹ்ம்ம் நன நன நான
நன நன நான

ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது

தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
உன் வீட்டை தேடவா
உறங்காமல் தேயவா

ஓஹோ ஹோ ஹோ தினம்
ஓஹோ ஹோ ஹோ கணம்
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்

ஓஹோ ஹோ ஹோ வரும்
ஓஹோ ஹோ ஹோ கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்

ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது

இன்னும் என்ன இடைவெளி
தூரம் மறுதளி
பக்கம் வந்தால் அனுமதி
போதும் அரை நொடி

ஓஹோ என்னை உன்னை பிரித்திடும்
காற்றில் கதகளி
மேலே நின்று சிரித்திடும்
மஞ்சள் நிலவொளி

ஹா தீ மூட்டும் வானத்தை
திட்ட போகிறேன்
மழை வந்தும் காய்வதால்
முத்தம் தேடினேன்

ஒரு புறம் நாணம் கிள்ளுதே
மறுபுறம் ஆசை தள்ளுதே
என்னை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது

தினசரி என்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
என் வீட்டை தேடி வா
உறங்காமல் தேயவா

வானம் பெய்ய கடவது
ஈரம் இனியது
முத்தம் கொண்டு துடைப்பது
இன்னும் எளியது

உள்ளே தூங்கும் அனல் இது
உறக்கம் கலையுது
எத்தனை நாட்கள் பொறுப்பது
ஏங்கி தவிக்குது

ஹோ நான் இன்று நான் இல்லை
நாணல் ஆகிறேன் (லா லா லாலா)
நதி போலே நீ சென்றால்
நானும் வளைகிறேன்

ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது

தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
என் வீட்டை தேடி வா
உறங்காமல் தேயவா

ஓஹோ ஹோ ஹோ தினம்
ஓஹோ ஹோ ஹோ கணம்
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்

ஓஹோ ஹோ ஹோ வரும்
ஓஹோ ஹோ ஹோ கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்



Credits
Writer(s): J Harris Jayaraj, Subramanian Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link