Aagasam

ஏ ஆகாசம் எப்போதும் பொதுதான்டா இங்க
அட அவகாசம் வாங்கி அத புடிபோமடா
வீண் வேஷம் போடும் கூட்டம் அத மறப்போம்டா கொஞ்சம்
இரும்பால ரெக்க செஞ்சு இனி பறப்போமடா

வெட்டி பசங்க வேல இதுன்னு சொல்லுறவய்ங்க வெத்து பயக
வெற்றி வந்தா வட்டி முதலா வந்து இழிப்பாய்ங்க எச்ச பயக
வெட்டி பசங்க வேல இதுன்னு சொல்லுறவய்ங்க வெத்து பயக
வெற்றி வந்தா வட்டி முதலா வந்து இழிப்பாய்ங்க எச்ச பயக

இங்க இருக்குடா வானம்
அத எட்டி புடிக்க வா நாளும்
எங்க இருக்குடா தூரம்
கிட்ட போக போக அது மாறும்
கனவ பெருசாகவே வெதப்போமே
தடைகள் இருந்தாலும் தெறிப்போமே

நிலவ தெனம் தொரத்தி போனா வயசு இல்ல பங்காளி
கனவ இனி தொரத்தி போனா கவலை இல்ல கூட்டாளி
தோத்தா கூட பரவா இல்ல உலகம் உன்ன மறக்காதே
வேடிக்கை மட்டும் பார்த்தா வெத்தா கூடா மதிக்காதே

வெற்றி ஏதும் பார்க்காத போராட்டமா இருந்தாக்கா
தோல்வி ஏதும் தெரியாத கொண்டாட்டமா மாறாதா
உன்ன போல யாராலும் உன்ன வாழ முடியாதே
நண்பன் கூட நின்னாக்கா உன்ன வீழ்த்த முடியாதே

இங்க இருக்குடா வானம்
அத எட்டி புடிக்க வா நாளும்
எங்க இருக்குடா தூரம்
கிட்ட போக போக அது மாறும்

இரும்பால ரெக்க செஞ்சு பறபோமே
ஏ, பற பற பற பற பற பற பற பற
ஏ, பற பற பற பற பற பற பற பற
ஏ, பற பற பற பற பற பற பற பற
பற பற பற பற பற பற பற பற
ஏ, பற பற பற பற பற பற பற பற
பற பற பற பற பற பற பற பற



Credits
Writer(s): Arunraja, Prakashkumar G. Venkate
Lyrics powered by www.musixmatch.com

Link