Oru Arai Unathu (From "Maara")

ஒரு அறை உனது
ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா

ஒரு அலை உனது
ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா

ஒரு முனை உனது
ஒரு முனை எனது
இருவரின் துருவம் இணைந்திடுமா

ஒரு முகில் உனது
ஒரு முகில் எனது
இடையினில் நிலவு கடந்திடுமா

ஒரு கதை உனது
ஒரு கதை எனது
விடுகதை முடியுமா

ஒரு அறை உனது
ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா

ஒரு அலை உனது
ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா

வண்ணம் நூறு வாசல் நூறு
கண் முன்னே காண்கின்றேன்
வானம்பாடி போலே மாறி
எங்கேயும் போகின்றேன்

வானத்துக்கும் மேகத்துக்கும்
ஊடே உள்ள வீடொன்றில்
யாரும் வந்து ஆடி போகும்
ஊஞ்சல் வைத்த என் முன்றில்
போகும் போக்கில்
போர்வை போர்த்தும் பூந்தென்றல்

ஒரு பகல் உனது
ஒரு பகல் எனது
இடையினில் இரவு உறங்கிடுமா

ஒரு இமை உனது
ஒரு இமை எனது
இடையினில் கனவு நிகழ்ந்திடுமா

ஒரு மலர் உனது
ஒரு மலர் எனது
இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா

ஒரு முகம் உனது
ஒரு முகம் எனது
இருவரும் நிலவின் இருபுறமா

ஒரு பதில் உனது
ஒரு பதில் எனது
புதிர்களும் உடையுமா

ஒரு அறை உனது
ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா

ஒரு அலை உனது
ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா

ஒரு முனை உனது
ஒரு முனை எனது
இருவரின் துருவம் இணைந்திடுமா

ஒரு முகில் உனது
ஒரு முகில் எனது
இடையினில் நிலவு கடந்திடுமா

ஒரு கதை உனது
ஒரு கதை எனது
விடுகதை முடியுமா



Credits
Writer(s): S Thamari, Mohamaad Ghibran Ghanesh Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link