Kadai Kannaaley

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
பார்த்த நொடி யுகமாய் நீள
பதை பதைத்து கண் திறப்பேன்
பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்று
கவன் வீசினால் கடை கண்ணாலே

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா

தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே தொடரும் உன் ஞாபகம்
உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்

கண்ணாளனே... கண்ணாளனே...
உன்னிடமே... என் மனமே...

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா...

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்

ஒளிந்தேன் மறைந்தேன் எதை பார்த்தும் நான்
உனைச் சேர்ந்த பின்பு பயம் நீங்கினேன்

படர்ந்தேன் அலைந்தேன் கோடி போல நான்
மணி மார்பில் சாய்ந்து மலர் சேர்க்கிறேன்

விழியை இமையை விரித்தேன்
உனை என் இளமையின் அரண்மனை வரவேற்க்குதே

விரலை நகத்தை கடித்தே எழுதும்
கவிதையை இதழ்களும் அரங்கேற்றுதே

இந்த நொடி போதும் தேனே
சிந்தி உரைந்தேனே நானே
உடலும் உயிரும் மெழுகாய் உருகும்

கண்ணாளனே... கண்ணாளனே...
உன்னிடமே... என் மனமே...

கடை கண்ணாலே ரசித்தேனே
கவின் பூவே கண்ணாளா
குடைக்குள்ளாடும் மழைக்காக
எதிர் பார்த்தேன் இந்நாளா

தரை நில்லா நில்லா இரு காலோடு
கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு
உறங்காமலே தொடரும் உன் ஞாபகம்
உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்

கண்ணாளனே... கண்ணாளனே...
உன்னிடமே... என் மனமே...

கடை கண்ணாலே ரசித்தேனே...



Credits
Writer(s): S Thamari, D Imman
Lyrics powered by www.musixmatch.com

Link