Yaaro Ucchikilai Meley

யாரோ உச்சிக்கிளை மேலே
குடை பிடித்தாரோ
அது யாரோ பெரும் மழைக்காட்டை
திறக்கும் தாழோ

யாருமின்றி யாரும் இங்கு இல்லை
இந்த பூமி மேலே
தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை

பேரன்பின் ஆதி ஊற்று
தரனனன்னே நன்னே நானா
அதை தொட்ட்டுத்திறக்குது காற்று
தரனன்னே நன்னே நானா

அடி தரையில் வந்தது வானம்
தரனன்னே நன்னே நானா
இனி நட்சத்திரங்களின் காலம்
தரனன்னே நன்னே நானா
காட்டில் ஒரு குறு குறு பறவை
சிறு சிறு சிறகை அசைக்கிறதே
காற்றில் அதன் நடனத்தின் ஓசை
கைகளை நீட்டி அழைக்கிறதே

காலம் அது திரும்பவும் திரும்புது
கால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது
பெண்ணே நீ அருகினில் வர வர
காயங்கள் தொலைகிறதே
அடி கண்ணீரில் கண்கள் மறையும்போது நீ வந்தாயே
உன் தோலில் நானும் சாயும்போது நீ என் தாயே



Credits
Writer(s): Muthukumar N, Shankar Raja Yuvan
Lyrics powered by www.musixmatch.com

Link