Oh Azhage

Oh அழகே, oh அழகே
தொட்டா சிணுங்கி வானே
நீ சிணுங்க, நீ சிணுங்க
பொன்னாய் புலருதே
அதில் நெஞ்சம் மலருதே

Oh மனமே, oh மனமே
மின்னும் பனியின் கீழே
போயி ஒழிய, போயி ஒழிய
கொஞ்சம் ஏங்குதே
அதில் தஞ்சம் தேடுதே

அடங்காத காற்றே
அடங்காத காற்றே
அடங்காத காற்றே
அடங்காத காற்றே

தூர அலைகள் காலை நனைக்கும்
மாய நதி இது
மேகம் தணிந்து வாசல் தெளிக்கும்
தூய மழை இது

விழாக்கள் தோறும் ஓரமாக
நின்று பார்க்க நேரும்
நிலாக்கள் இன்றி வானம் கூட
மெளனமாக மாறும்

ஒரு வீடு பரிவோடு
வரவேற்க நீளும் போது
அதனோடு உரையாடு
அது போல் ஒரு வரம் ஏது

அடங்காத காற்றே
அடங்காத காற்றே
அடங்காத காற்றே
அடங்காத காற்றே

Oh அழகே, oh அழகே
தொட்டா சிணுங்கி வானே
நீ சிணுங்க, நீ சிணுங்க
பொன்னாய் புலருதே
அதில் நெஞ்சம் மலருதே

காற்று குமிழி போல
உடைந்து போகும் மகிழ்வினை
போற்றி வளர்த்து, போற்றி வளர்த்து
காக்கும் ஒருவனை
துழாவி தேடி கண்ணின் முன்பு
கொண்டு காட்டும் காலம்

கனாவில் கூட நேர்ந்ததில்லை
நேர்ந்ததிந்த மாயம்
அவன் யாரோ தொடுவானோ
தொலை தூர கோடு தானோ
வழி தேரோ வரலாறோ
புரியா குறுநகை தானோ

Oh அழகே, oh அழகே
தொட்டா சிணுங்கி வானே
நீ சிணுங்க, நீ சிணுங்க
பொன்னாய் புலருதே

Oh மனமே, oh மனமே
மின்னும் பனியின் கீழே
போயி ஒழிய, போயி ஒழிய
கொஞ்சம் ஏங்குதே

(அடங்காத காற்றே)
(அடங்காத காற்றே)



Credits
Writer(s): S Thamari, Mohamaad Ghibran Ghanesh Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link