Thendral Vanthu X Elangaathu Veesuthey (Mashup Cover)

பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு

அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு

நேத்து தனிமையில போச்சு
யாரும் துணை இல்ல
யாரோ வழித்துணைக்கு வந்தா
ஏதும் இணை இல்ல

உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகமும் முழிச்சு கேக்குதே

கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே

மணியின் ஓசை கேட்டு
மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு
உடல் காத்தில் மிதக்குதே

இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே



Credits
Writer(s): Maestro Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link