Vilahaathe

வேஷமா... என் காதலே...
என்னைக்குத்திக் கிழித்ததுந்தன் வார்த்தையே
ரோஷமாய் நீயும் போகிறாய்...
உந்தன் பிரிவை விடவும் துயரில்லயே

எந்தன் வாழ்க்கை நின்றது ஓரிடத்தில்
உன்னை எப்படி விடுவேன் வேறிடத்தில்
எந்தன் வாழ்க்கை நின்றது ஓரிடத்தில்
உன்னை எப்படி விடுவேன் வேறிடத்தில்

விலகாதே... விலகாதே... பேரன்பே விலகாதே...
அகலாதே... அகலாதே... என் கண்ணை விட்டு அகலாதே...

உன் வாசனை என் சுவாசத்தில், கலந்தேதான் கொல்கிறதே
என் யோசனை அவை யாவுமே, உனை நினைக்க சொல்கிறதே

ஓ... கன்னக்குழி அழகி எந்தன் கண்ணைப்பறித்து சென்றதேன்
கண்ணிழந்த பின்னும் பெண்ணே நீதான் வேண்டும் என்றேனே

விலகாதே... விலகாதே... பேரன்பே விலகாதே...
அகலாதே... அகலாதே... என் கண்ணை விட்டு அகலாதே...
விலகாதே... விலகாதே... பேரன்பே விலகாதே...
அகலாதே... அகலாதே... என் கண்ணை விட்டு அகலாதே...

வேஷமா... என் காதலே...
என்னைக்குத்திக் கிழித்ததுந்தன் வார்த்தையே
ரோஷமாய் நீயும் போகிறாய்...
உந்தன் பிரிவை விடவும் துயரில்லயே

எந்தன் வாழ்க்கை நின்றது ஓரிடத்தில்
உன்னை எப்படி விடுவேன் வேறிடத்தில்
எந்தன் வாழ்க்கை நின்றது ஓரிடத்தில்
உன்னை எப்படி விடுவேன்...

விலகாதே... விலகாதே... பேரன்பே விலகாதே...
அகலாதே... அகலாதே... என் கண்ணை விட்டு அகலாதே...
விலகாதே... விலகாதே... பேரன்பே விலகாதே...
அகலாதே... அகலாதே... என் கண்ணை விட்டு அகலாதே...

Credits
Writer(s): Rethuskaran Ramaneekaran
Lyrics powered by www.musixmatch.com

Link