Indru Raghuvaran

இன்று ரகுவரன் ஜானகியை மணந்து இன்பம், அடைந்து என்றும்
மகிழ்ந்து இங்கு, வாழ்ந்திடவே
எங்கள் மிதிலையின் பேரழகை

மணந்து இன்பம், அடைந்து என்றும்
மகிழ்ந்து இங்கு, வாழ்ந்திடவே
இசைக் கோலமே வரைந்திடுங்கள் இன்று

குமரி இவள் முகம் வான்மதியாக
அழகு தெய்வம் இவள் உன் நிழலாக
ராமனின் காதல் மனோஹரியாக
ஈருடல் ஓர் உயிர் போல் உறவாக
ராமனுக்கேற்ற சீதை என்று
பூமியும் வானமும் போற்றிட

மணந்து இன்பம், அடைந்து என்றும்
மகிழ்ந்து இங்கு, வாழ்ந்திடவே
இசைக் கோலமே வரைந்திடுங்கள் இன்று

தசரதர் மைந்தனைப் பார்த்தே மகிழ்ந்து
ஜனகரும் சீதையை கண்டு நெகிழ்ந்து
மூத்தவன் ரகுகுலம் காத்தவன் என்று
பார்த்தனர் யாவரும் நேத்திரம் திறந்து
மூன்றுலகும் வியந்து, வியந்து
இரு கரம் கூப்பி வணங்கிட

மணந்து இன்பம், அடைந்து என்றும்
மகிழ்ந்து இங்கு, வாழ்ந்திடவே
இசைக் கோலமே வரைந்திடுங்கள் இன்று

அருட்கரம் காட்டி முனிவர்கள் வாழ்த்த
அடுத்த நிகழ்ச்சிக்கு ஞாபகமூட்ட
ராமன் திருக்கரம் குங்குமம் எடுத்து

பாடுவீர் சுபமங்களம் பாடுவீர்
பாடுவீர் சுபமங்களம் பாடுவீர்

சீதா ராமனின் திருமணம் கண்டு
அனைவரும் நலன் பெறவே

பாடுவீர் சுபமங்களம் பாடுவீர்
பாடுவீர் சுபமங்களம் பாடுவீர்



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link