Raghunaatha En Raghunaatha

ரகுநாதா, என் ரகுநாதா
ரகுநாதா, என் ரகுநாதா

மன ஓடம் உன் கைகளில் அன்றோ
மன ஓடம் உன் கைகளில் அன்றோ

திருவடி தானே என் துணை ராசா
இரு அடி இன்றி ஒரு துணை இல்லை
கங்கையில் படகு நானன்றோ

மன ஓடம் உன் கைகளில் அன்றோ
மன ஓடம் உன் கைகளில் அன்றோ

சாமி என் ராசா மகிமையினாலே
கல்லும் பெண்ணாக மாறிய மாயம்
பயமே நெஞ்சில் நதியைக் கேளு
என் படகன்றி, நான் என் செய்ய?

ஏழையின் குடும்பத்தில், படகில்லை என்றால்
ஏழையின் குடும்பத்தில், படகில்லை என்றால்
என் எதிர்காலம், இவளின் கோபம்
இது சம்சாரம், கவனம் வேண்டும்
நான் என்ன செய்ய, நீரே சொல்வீர்
ஓடம் நதியினில் அன்றோ

மன ஓடம் உன் கைகளில் அன்றோ

தயாநிதி உன் தரிசனம் கண்டேன்
தாயின் கருணை உன் விழியில் கண்டேன்
ராமா உந்தன் கால்களைத் கழுவும்
பாக்கியம் எனக்கு நீ தரவேண்டும்
இதுபோல் ஒருநாள் எனக்கினி வருமா
ஏழையின் மனதில் மகிழ்ச்சியைத் தருமா

முனிவர்கள் எல்லாம் தவம் புரிவாராம்
மூச்சை அடக்கி உனை நினைப்பாராம்
ஊழியன் எனக்கு அது தெரியாது
சரணாம்ருதத்தை அருந்திடத் தெரியும்
சரணாம்ருதத்தை அருந்திடத் தெரியும்
சாமி உன்னை கும்பிடத் தெரியும்
ஏழைக்கு வேறென்ன தெரியும்
இந்த ஏழைக்கு வேறென்ன தெரியும்

ஓடக்காரா
ஓடத்தின் பாக்கியம், ஐயா
உன் ஓடத்தின் பாக்கியம், ஐயா
இன்று உன் ஓடத்தில், இறைவன் அமர்ந்தான்
தவக் கடல் தாண்ட வைப்பான்
அவன், தவக் கடல் தாண்ட வைப்பான்

உன் போன்ற உழைப்பாளி நானும், ஐயா
ஒரு தொழில் செய்பவன் ஒரு குலம், ஐயா
நீயும் படகோட்டி, நானும் படகோட்டி
நீயும் படகோட்டி, நானும் படகோட்டி
நீயிதை அறிவாய், ஐயா ராமய்யா

ஓ உன் தொழில் என்ன?
தவ வினைத் தீர்ப்பது
திருவடி தான் பவசாகரப் படகு
சேவைக்கு ஊதியம் நான் பெறலாமா?
சேவைக்கு ஊதியம் இல்லை
ராம சேவைக்கு ஊதியம் இல்லை
பக்தன் சேவைக்கு ஊதியம் இல்லை



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link