Uyirinum Iniya

உயிரினும் இனிய சீதையைப் பிரிந்து
வனம் தனில் அலைந்தனன் ராமன்
வனம் தனில் அலைந்தனன் ராமன்

இணைப்பிரியாமல் இருந்தவள் சீதை
அவள் எங்கு போனாளோ?

உயிரினும் இனிய சீதையைப் பிரிந்து
வனம் தனில் அலைந்தனன் ராமன்
வனம் தனில் அலைந்தனன் ராமன்

புனிதனின் நிலமை புண்படும் தனிமை
விதி செய்ததே அதனால் இந்த கொடுமை
வானமே, வனமே, வைதேகி எங்கே?
விடை சொல்லுவாய் இவன் ஜீவனெங்கே?
மரமே கண்டாயா? மங்கை சீதையை
ராமனின் தேவி எங்கே?

உயிரினும் இனிய சீதையைப் பிரிந்து
வனம் தனில் அலைந்தனன் ராமன்
வனம் தனில் அலைந்தனன் ராமன்

காலத்தின் கோலம் கானக வாசம்
அதிலும் கொடிது அவளின் பிரிவாகும்
காற்றே, எங்குமே போகின்றாயே,
கண்டனயா ஜனகன் மகளை?
கானகமே உன் மவுனத்தை கலைத்து
பதில் சொல்லமாட்டாயா?

உயிரினும் இனிய சீதையைப் பிரிந்து
வனம் தனில் அலைந்தனன் ராமன்
வனம் தனில் அலைந்தனன் ராமன்

இணைப்பிரியாமல் இருந்தவள் சீதை
அவள் எங்கு போனாளோ?

உயிரினும் இனிய சீதையைப் பிரிந்து
வனம் தனில் அலைந்தனன் ராமன்
வனம் தனில் அலைந்தனன் ராமன்



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link