Angadhan Oondriya

அங்கதன் ஊன்றியக் காலை அசைத்திடவே
அவையே ஆழ்ந்த அதிர்ச்சியில் மூழ்கிடவே
ராமனின் தூதனின் வீரத்தை புகழ்ந்திடவே
இலங்கையின் வேந்தன் ராவணன் வியந்திடவே

மந்தி என்று அட அலட்சியமாடா?
மந்தி என்று அலட்சியமா
மன்னவனே அடச் சின்னவனே
நிந்தனைச் செய்தவனே

என் காலை யார் அசைப்பார்
சொல்வாய் நீ
அங்கதன் உன்னிடம் கண்டிடவேண்டும்
யார் அசைப்பார், சொல்வாய் நீ

முதலில் அவன் காலைப் பிடித்திழுத்து தரையிலே அடித்துக் கொள்ளுங்கள்

வல்லமை உள்ளவன் நீயா?
வல்லமை உள்ளவன் வாடா, வந்து காலை அசைத்திடடா
முடிந்தால், நீ முயன்று பார்த்திடடா
நீ போடா போ, போடா
யார் அங்கதன் காலை அசைத்திடும் வீரன்
யார் இங்கே, வா இங்கே

காலா? கல்லா? மலையா?
காலா? கல்லா? மலையா?
வந்தவர் கைகள் சோர்ந்து போக
மூச்சை பிடித்தும் முடிந்தால் தானே
அங்கதன் காலை அசைப்பவர்
யார் இங்கே, முடிந்தால் வந்து பாரு
வாடா வா, இங்கே வா

இந்திரஜித்தனே இங்கே விரைந்து வந்தானே
அருகில் வந்து நின்று வியந்து விட்டானே
இந்திரனை வென்ற என்னால், இது முடியாதா?
அங்கதனின் காலை என் கை, அசைத்துவிடாதா?
மூச்சடைத்தும் முகம் வியர்த்தும், ஆச்சரியம் என்னே
மேகநாதன் சோகநாதன் ஆகும் நிலை என்னே

தசமுக ராவணன் மகனே
தசமுக ராவணன் மகனே தவித்தான்
தளர்ந்து தளர்ந்து விழித்தான்
முடிவில் அவனே கையில் எடுத்தான்
வியந்தானே இலங்கை வேந்தன், சபையே வியந்தது கண்டு

இந்திரஜித்தன் இங்கே தோற்றான்
அகம்பாவம் ஜெயிக்காது
ஆன்மபலம் தோற்காது



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link