Naerukku Naeraai

நேருக்கு நேராய் ராமனும் தீபனும்
சந்தித்த பரவச நேரம்
இங்கே சந்திக்க எத்தனைக் காலம்

ஆயிரம் கேள்விகள், அண்ணலின் கண்ணில்
ஆர்வமும் வேகமும், தேவியின் நெஞ்சில்
தேவியின் நெஞ்சில்
அங்கே நில்

நில் என்று சொன்னதும் தேவியை, ஸ்ரீ ராமன்
வியப்பு, வேதனை, அங்கே எல்லார்க்கும்
மௌனத்தின் பின்னே மாபெரும் எரிமலையோ
அண்ணலின் ஆணைக்கு காரணம் தான் எதுவோ
அன்னையின் உள்மனம் அறிந்திடுமோ

லக்ஷ்மணனே அண்ணல் ஆணைக்கு இணங்க
எரித்தழல் இங்கே வரட்டும்
என் தேகம் பற்றிய சந்தேகம் தீர
உடனே இங்கே வரட்டும்

அண்ணியின் சொல் கேட்டு, லக்ஷ்மணன் கலங்கி
அண்ணனின் பக்கம் பார்க்க
என் பணி என்ன, என் பணி என்ன கும்பிட்டு
அண்ணனைக் கேட்க
சொன்னபடி செய், சொன்னபடி செய்
ஸ்ரீ ராமன் ஜாடைக் காட்ட



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link