MGR Song (From "Narkali")

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு?
அந்த வள்ளலுக்கு வெச்ச பெயர் வாத்தியாரு

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு?
அந்த வள்ளலுக்கு வெச்ச பெயர் வாத்தியாரு
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு
அந்த மன்னாதி மன்னன் பெயர் M.G.R'ரு
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு?
அந்த வள்ளலுக்கு வெச்ச பெயர் வாத்தியாரு
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு
அந்த மன்னாதி மன்னன் பெயர் M.G.R'ரு
அவர் அண்ணனின் தம்பியே
ஏழைத் தம்பியின் தோழனே
அவர் மக்களின் தலைவனே
அவர் வழியில் நான் ரசிகனே
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு?
அந்த வள்ளலுக்கு வெச்ச பெயர் வாத்தியாரு
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு
அந்த மன்னாதி மன்னன் பெயர் M.G.R'ரு

தன்னந்தனியாய் தமிழ்நாட்டில்
ஒரு ஏழைத்தாயவள் சிறுகூட்டில்
வாழ்வைத் துவங்கிய திரைக்கலைஞன்
தென்னாட்டின் பெருந்தலைவன்
தோட்டா அவரை ஜெயித்ததில்லை
அவர் தோட்டத்தில் பாசம் குறைந்ததில்லை
மக்கள் திலகத்தின் மணிமகுடம்
இதுநாள் வரை இறங்கவில்லை
இதயக்கனியாய் - ஒரே மனம்
இமயமலையாய் - எழும் குணம்
எதையும் ஜெயிக்கும் - ஒரே பலம்
என்றும் நிலைக்கும் - ஒரே புகழ்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு?
அந்த வள்ளலுக்கு வெச்ச பெயர் வாத்தியாரு
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு
அந்த மன்னாதி மன்னன் பெயர் M.G.R'ரு

புரட்சித்தலைவன் என்றழைத்தோம்
அந்த பொன்மனச்செம்மலை தினம் ரசித்தோம்
தன்னை நாட்டுக்கே தந்ததினால்
தமிழ் நாட்டை நாம் கொடுத்தோம்
வலது கையிலே கடிகாரம்
ஊர் வறுமை தீர்த்ததவர் அதிகாரம்
வாழும் போதிலே வரலாறு
அவர் போல் இங்கு வேறாரு?
கொடுத்துச்சிவந்த வள்ளல் கரம்
கொஞ்சி சிரிக்கும் பிள்ளை மனம்
தோல்வி அறியா ஒரே முகம்
நாளை நமதே என்னும் திடம்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு?
அந்த வள்ளலுக்கு வெச்ச பெயர் வாத்தியாரு
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு
அந்த மன்னாதி மன்னன் பெயர் M.G.R'ரு
அவர் அண்ணனின் தம்பியே
ஏழைத் தம்பியின் தோழனே
அவர் மக்களின் தலைவனே
அவர் வழியில் நான் ரசிகனே



Credits
Writer(s): Pa Vijay, Vidyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link