Thanimaiyin Vali

ஹே நீ வாடா
என் தனிமையும் இனிமையா ஆகுமடா
ஹே நீ வாடா
என் கனவது நினைவன ஆகுமடா
ஹே நீ வாடா
என் தனிமையும் இனிமையா ஆகுமடா
ஹே நீ வாடா
என் கனவது நினைவன ஆகுமடா

மௌனம் என்பது என் மொழிதான்
தனிமை என்பது ஓர் வழிதான்
தோல்வி என்பது பல முறதான்
வெற்றி என்பது ஒரு முறைதான்
அனுபவம் என்பதை கற்றுகொள்
ஆணவ பேச்சினை விட்டுச் செல்
தலைகனம் என்பது தலை அறுக்கும்
தனிமை என்றும் உன்னை உயர்த்தும்

மறந்திடு மறந்திடு காயங்களை மறந்திடு
அழுதிடு அழுதிடு கண்ணீர் விட்டு அழுதிடு
விலகிடு விலகிடு சிரித்திட்டு விலகிடு
பழகிடு பழகிடு தனிமையில் பழகிடு
பிறந்திடு பிறந்திடு மறுமுறை பிறந்திடு
எழுந்திடு எழுந்திடு தீயேன எழுந்திடு
உயர்ந்திடு உயர்ந்திடு வெறிக்கொண்டு உயர்ந்திடு
வென்றிடு வென்றிடு தனிமையை வென்றிடு

தனிமை ஒன்றே பின்னால் நின்று
என்றும் உன்னக்கு தொழ் கொடுக்கும்
சோகம் ஒன்றே முன்னால் நின்று
தனிமை என்பதை ஆட் பரிக்கும்
காதல் ஒன்றே காயம் தந்து
என்றும் உன்னை கலங்கடிக்கும்
காதல் ஒன்றே வலியும் தந்து
வாழ்வில் ஜெயிக்க வழி நடத்தும்

நிழலே இல்லா உடல போல தனிமையில் நானும் நின்றேனே
ஒலியே இல்லா மொழிய போல தனிமையின் பாசை கண்டேனே

காதலால நா காயப்பட்டு தான் வலியமட்டும் தான் கண்டேனே
சோகத்தால என் கண்ணீர் கூடவே வற்றிபோய் நின்றேனே

தனிமை என்பது போராட்டம்
கண்ணில் ஏனோ நீரோட்டம்
மௌனம் ஒன்றே தான் தலாட்டும்
காயம் எல்லாம் ஆரட்டும்
உன் பார்வை நீயும் நேரக்கு
தடைகள் வந்தால் தூலாகு
முயற்சி என்பதை விரிவாக்கு
தோல்வி எல்லாம் படியாக்கு

ஒத்தையடி பாதையிலே உன்ன தேடி போகையிலே
உன்னுடைய என்னம் மட்டும் என்னை குத்தி கொல்லுதடி
தன்னந்தனி காட்டுகுள்ள தனிமையில் போகையிலே
என்னுடைய கண்ணு ரெண்டும் கண்ணீரிட்டு போனதடி
மேடையில்ல ஏறயில்ல உன்ன பத்தி பாடயில்லே
என்னுடைய வலி எல்லாம் கவிதையா மாறுதடி
உன்னுடைய நெனப்புல கண்ணீர நான் வடிக்கல
என்னத்த நான் மாதிருக்க

ஒத்தையடி பாதையிலே உன்ன தேடி போகையிலே
உன்னுடைய என்னம் மட்டும் என்னை குத்தி கொல்லுதடி
தன்னந்தனி காட்டுகுள்ள தனிமையில் போகையிலே
என்னுடைய கண்ணு ரெண்டும் கண்ணீரிட்டு போனதடி
மேடையில்ல ஏறயில்ல உன்ன பத்தி பாடயில்லே
என்னுடைய வலி எல்லாம் கவிதையா மாறுதடி
உன்னுடைய நெனப்புல கண்ணீர நான் வடிக்கல
என்னத்த நான் மாதிருக்க வெற்றிக்காக காத்திருக்க



Credits
Writer(s): M. S. Anosh, S. Thangaraj
Lyrics powered by www.musixmatch.com

Link