Sikki Sikki Thavikiren

எங்கே எங்கே அந்த அழகு ஓவியம்
கண்கள் ரெண்டை பறித்து கொண்டாய்
கண்ணை கண்ணை மெல்ல பறித்த காவியம்
உண்மை சொன்னேன் மறைந்து சென்றாய்

பூவே வாய் பேசு
என் ஆசை நிறைவேறும்
கண்ணே விழி மூடு
என் இதயம் உடைந்தோடும்

சிக்கி சிக்கி தவிக்கிறேன் கனவுக்குள்ளே
உந்தன் நினைவாலே
என்னென்னமோ என்னென்னமோ வயசுக்குள்ளே
உந்தன் விழியாலே

எங்கே எங்கே அந்த அழகு ஓவியம்
கண்கள் ரெண்டை பறித்து கொண்டாய்
கண்ணை கண்ணை மெல்ல பறித்த காவியம்
உண்மை சொன்னேன் மறைந்து சென்றாய்

நீ மறைந்தாலும் எப்படியோ கண்டு பிடிப்பேன்
நீ பிரிந்தாலும் ஒட்டி கொள்ள வழி தேடுவேன்
சொல்லாமலே நீ எங்கே சென்றாலும்
நிழலாய் இருப்பேனடி

உன்னை போல் ஓர் அழகு ஓவியம்
என் வாழ்வில் வந்தது அதிசயம்
இந்த மனசுக்குள் ஆசைகள் ஆயிரம்
ஆசைகளோடு வாழ பெண்ணே
அருகில் நீ வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்
என் அருகில் நேரமும் நீடி வேண்டும் வேண்டும்
என் ஆசைகளுடன் வாழ

புன்னகை பூவே
நீ சிரித்தால் விடியும் என் வாழ்வே
தென்றலின் தேர்வே
அதை படித்தேன் உன்னிடம் தானே

நிறம் முகம் மாறாதே காதல்
என் ஒரே சொல்லில் உன் வாழ்வின் தேடல்
அன்பே உன்னை நான் கண்ட நாளில்
என் மனம் தரேன்

சிக்கி சிக்கி தவிக்கிறேன்
பார்த்தேன் அந்த நேரம் அது ஒரு மழை காலம்
அவா என்னை பார்க்க வரேன்னு சொன்னாலே மறந்தும் உள்ளம்
மாறும் தடுமாறும் எந்தன் மனம்

கண்ணுக்குள் இருக்கு உன் கன்னம்
உன் சிரிப்பொன்று போதும் உன் உருவத்தை கற்பனை கொள்ளவே
இத்தனை நாளா தேடின தேடல்
நீதானடி முடிவு

தடைகளை தாண்டி வந்து உன்னை நான் நெருங்கினேன்
கடலிலே மூழ்காமல் உன்னிடம் மூழ்கிட
தேவதை உன்னிடம் வரம் ஒன்று கேட்டிட
காதலில் விழுந்தேன் நீ தரிசனம் காட்டிட ஏய் பெண்ணே

சிக்கி சிக்கி தவிக்கிறேன் கனவுக்குள்ளே
உந்தன் நினைவாலே
என்னென்னமோ என்னென்னமோ வயசுக்குள்ளே
உந்தன் விழியாலே

சிக்கி சிக்கி தவிக்கிறேன் கனவுக்குள்ளே
உந்தன் நினைவாலே
என்னென்னமோ என்னென்னமோ வயசுக்குள்ளே
உந்தன் விழியாலே



Credits
Writer(s): Psychomantra & Nishanlee
Lyrics powered by www.musixmatch.com

Link