Yarin Vaalkai

யாரின் வாழ்க்கை இது
யாரின் மூச்சு இது
யாரின் உடலுக்குள் நானோ
யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே

நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே

வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே

யாரின் வாழ்க்கை இது
யாரின் மூச்சு இது
யாரின் உடலுக்குள் நானோ
யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே

நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே

வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே

நான் உனை நீ எனை
காணவே நிகழ்ந்தகவென்ன
தோழியாய் காதலாய்
மாறவே நிகழ்ந்தகவென்ன

நீ எந்தன் முகவரி என்றோ
நான் உந்தன் நிகழ்படம் என்றோ
காலத்தின் போக்கில் மாறக்கூடும்
அதன் நிகழ்ந்தகவென்ன

என் வாழ்வின் தோன்றிடம் வேறு
உன் வாழ்வின் சேரிடம் வேறு
நிகழ்ந்தகவினாலே இங்கே திகழ்க்கிறோமா

யாரின் பெருங்கதையில் நீயும் நானும் சிறு
பாத்திரங்கள் என ஆனோம்
யாரின் கவிதையில் சொல்லாகிறோம்

நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே

வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே

நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே

வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Dharan Kumar C
Lyrics powered by www.musixmatch.com

Link