Kadhal Bodhai

அலை போலே நீ தாக்க
கரைந்தே போகிறேன்
சொல்லாத ஏக்கங்கள்
நெஞ்சில் ஏற்கிறேன்

மனதினில் புதுவித
சிறகுகள் பறந்திட
உன்னால், உன்னால், உன்னால் எனையே காணல
விழி, விழி மோதிட மயக்கங்கள் கூடிட
அய்யோ, அய்யோ, அய்யோ இமைகள் மூடல

இது காதலா?
என் காதலா
என் காடெல்லாம் பூக்கள் பூக்குதே

காதல் போதை நீயே, நீயே
காலை, மாலை வாசம் நீயே
ஆக்கம் நீயே, ஏக்கம் நீயே
வானில் மோதும் மேகம் நீ

உன்னாலே நான் கண்ட
வலிகள் ஆர பிழைத்தேனே
மன்றாடும் மழை போலே
மடியில் சேர நினைத்தேனே

எனை வந்து ஈர்த்திட
பார்க்கிறேன் உனையே
புது விதி மாற்றிட கேட்டேன் எனையே
எனதுயிர் தோழியே காதலும் பொய்யடி
வாசம் இல்லா பூக்கள், பூக்கள்

காதல் போதை நீயே, நீயே
காதல் போதை நீயே, நீயே



Credits
Writer(s): Krithiga Seenuvasan
Lyrics powered by www.musixmatch.com

Link