Enjoy Enjaami

குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ
கம்பளி பூச்சி தங்கச்சி

அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டற ஓட்டற சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே

சுருக்கு பையம்மா வெத்தலை மட்டையம்மா
சொமந்த கையம்மா மத்தளம் கோட்டுயம்மா
தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி சங்கதியை கூறேண்டி
கண்ணாடிய காணாண்டி இந்தர்ரா பேராண்டி

அன்னக்கிளி அன்னக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி
இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி
கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கும் தான்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சைய பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன கூட்டுக்கு

பாடுபட்ட மக்கா வரப்பு மேட்டுக்காரா
வேர்வத்தண்ணி சொக்கா மினுக்கும் நாட்டுக்காரா
ஆக்காட்டி கருப்பட்டி ஊதங்கொழு மண்ணுச்சட்டி
ஆத்தோரம் கூடுகட்டி ஆரம்பிச்ச நாகரீகம்
ஜன் ஜன ஜனக்கு ஜன மக்களே
உப்புக்கு சப்பு கொட்டி முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
அடக்கி ரத்தங்கொட்டு கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் செழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே

என் கடலே கரையே
வனமே சனமே
நிலமே குளமே
இடமே தடமே

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

Enjoy எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி

பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தா சுத்தி வந்தா...



Credits
Writer(s): Stany Kibulu, William Sami Etienne Grigahcine, Rajagopalan Santhosh Narayanan Cetlur, Kalainesan Arivarasu
Lyrics powered by www.musixmatch.com

Link