En Vazhka

என் வாழ்க்க
எங்க போது?
அத வாழ
செம bore-uh

இந்த வாழ்க்க
இப்போது
என்ன நல்லா
வச்சி செய்யுது

இந்த வாழ்க்கையில அட ஒன்னும் இல்ல
வாழ நினைக்கிறவன் கையில் காசு இல்ல
காசு இருக்குறவன் கிட்ட மனசு இல்ல
மனசு இருப்பவனுக்கு மதிப்பே இல்ல

இந்த வாழ்க்க அது ஒரு தள்ளுவண்டி
அத தள்ளிக்கிட்டே போக வேணும் வழி
வழிய தேடிக்கிட்டே வாழ்க்க போகுதடா
நேரம் நிற்காமல் ஓடுதடா

புரியுதா? புரியுதா?
நான் சொல்லும் கருத்து
பொலம்புறேன் பொலம்புறேன்
இந்த வாழ்க்கைய வெறுத்து

புரியுதா? புரியுதா?
நான் சொல்லும் கருத்து
பொலம்புறேன் பொலம்புறேன்
இந்த வாழ்க்கைய வெறுத்து

உன் வாழ்க்கைய நீ பாத்துக்கோ
எவனுமே பாக்க மாட்டான்
நீ விழுந்தா நீ சரிஞ்சா
ஏறி மிதிச்சிட்டு போவான்

யாருக்காகவும் எதுக்காகவும்
நண்பன விட்டுவிடாத டா
அவன் ஒருத்தன் மட்டும் தான் டா
கஷ்டத்துல தோல குடுப்பான் டா

நானும் நானும் நானும் இப்போ காதலிக்றேன்
காதலிச்சதால இப்போ கவிதை எழுதுறேன்
கவிதை எழுதி அவகிட்ட கொண்டு போகுறேன்
அவ கண்டுக்காம என்ன இப்போ கொண்ணு போடுறா

நானும் நானும் நானும் இப்போ காதலிக்றேன்
காதலிச்சதால இப்போ கவிதை எழுதுறேன்
கவிதை எழுதி அவகிட்ட கொண்டு போகுறேன்
அவ கண்டுக்காம என்ன இப்போ கொண்ணு போடுறா

இந்த வாழ்க்க
இப்போது
என்ன நல்லா
வச்சி செய்யுது

இந்த வாழ்க்கையில வரும் காதல் பல
அத தூக்கிப்போடு நமக்கு ஏன்டா தொல்ல
நீ வாடா மச்சான் போலாம் ஊருக்குள்ள
நாம ஜெயிக்கலாம் வாழ்க்கையில

இந்த வாழ்க்க அது ஒரு தள்ளுவண்டி
அத தள்ளிக்கிட்டே போக வேணும் வழி
வழிய தேடிக்கிட்டே வாழ்க்க போகுதடா
நேரம் நிற்காமல் ஓடுதடா

என் வாழ்க்க
எங்க போது?
அத வாழ
செம bore-uh

இந்த வாழ்க்க
இப்போது
என்ன நல்லா
வச்சி செய்யுது



Credits
Writer(s): Ganesh N
Lyrics powered by www.musixmatch.com

Link