Varugalamo

வருகலாமோ ஐயா
அங்கே வருகலாமோ ஐயா
நான் அங்கே வருகலாமோ ஐயா

உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் நின்று கொண்டாடவும்
பாடிக் கொண்டாடவும் பாடவும் அங்கே வருகலாமோ ஐயா

பரம க்ருபாநிதி அல்லவோ
இந்த பறையனுபஜாரம் சொல்லவோ
பரம க்ருபாநிதி அல்லவோ
இந்த பறையனுபஜாரம் சொல்லவோ
உந்தன் பரமானந்த தாண்டவம் பார்க்கவே நான் அங்கே
உந்தன் பரமானந்த தாண்டவம் பார்க்கவே நான் அங்கே வருகலாமோ ஐயா

பூமியில் புலையனாய் பிறந்தேனே
ஒரு புண்ணியம் செய்யாமல் இருந்தேனே
சுவாமி உன் சன்னிதி வந்தேனே
பவ சாகரம் தன்னையும் கடந்தேனே

பூமியில் புலையனாய் பிறந்தேனே
ஒரு புண்ணியம் செய்யாமல் இருந்தேனே
சுவாமி உன் சன்னிதி வந்தேனே
பவ சாகரம் தன்னையும் கடந்தேனே

கரை கடந்தேன் சரணம் அடைந்தேன் தில்லை வரதா
எந்தன் பரிதாபமும் பாபமும் தீரவே நான் அங்கே
எந்தன் பரிதாபமும் பாபமும் தீரவே நான் அங்கே வருகலாமோ ஐயா

உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் நின்று கொண்டாடவும்
பாடிக் கொண்டாடவும் பாடவும் அங்கே வருகலாமோ ஐயா



Credits
Writer(s): Gopalakrishna Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link