En Kadhale

Love is torture
Words can't just expressed
Love is gamble
With tears of pain in life to stress

Love makes you life and safe
When may we stand to lose the game
Love has this crazy name
The pain and sorrow died down in shame

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்?

சிலுவைகள் சிறகுகள்
ரெண்டில் என்ன தர போகிறாய்?
கிள்ளுவதை கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்?

காதலே நீ பூ எறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல் எறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்

இனி மீள்வதா ஆஅ?, இல்லை வீழ்வதா?
உயிர் வாழ்வதா ஆஅ?, இல்லை போவதா?
அமுதென்பதா?, விஷம் என்பதா?
உன்னை அமுதவிஷமென்பதா?

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்?

காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்

இது மாற்றமா ஆஅ?, தடுமாற்றமா?
என் நெஞ்சிலே ஏ பனி மூட்டமா?
நீ தோழியா இல்லை எதிரியா?
என்று தினமும் போராட்டமா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்?

சிலுவைகள் சிறகுகள்
ரெண்டில் என்ன தர போகிறாய்?
கிள்ளுவதை கிள்ளிவிட்டு



Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Sasi Prithem
Lyrics powered by www.musixmatch.com

Link