Annathe Sethi

எங்கையோ இருந்து வந்த ஒருத்தன்
நம்பள ஏமாத்தி நம்ம இடத்த புடிச்சி
நம்ம தலை மேல ஏறி உக்கார வரைக்கும்
எல்லாமே தன்னால சரியாவும் நெனச்சி
நம்ப சும்மாவே இருந்துருக்கோம்
துரு புடிச்சி போய்

நம்பளோட உரிமைங்கிறது
இன்னொருத்தன்கிட்ட கேட்டு வாங்குற
பிச்சை கிடையாது
அது நம்பளோட இயல்பு
நம்பளோட உரிமைய தடுக்கணும் நினச்சா
தடுக்குறவன் மூஞ்சிய விட்டுட்டு
அவன் மூளைய அடிச்சி ஒடைக்கணும்
அப்போதான் அடுத்து வரவனுக்கும்
அப்பிடி யோசிக்கணும்னு எண்ணமே வராது
எப்பவுமே main switch'uதான் must'u

வா ஒரு வழி வந்தது
சூரிய விதைகளை பயிரிடுவோம்
கடுங் காட்டுல மேட்டுல
வெளிச்சத்த மச்சான் விரித்திடுவோம்

அட வேலிய மீறி
பிழம்பா நின்னுட்டோம்
மள மள மளவென
அடிமைகள் கண்ணை முழிச்சிட்டோம்

அட கோட்டையில் ஏறிட
வேட்டைகள் யாவும் தொடங்கிட்டோம்
எளச்சவன் ஒழச்சவன் எழணும்
ஒதச்சவன் முதுகுல தரனும்

இரு கண்ணுல துடிக்குது பொறி, பொறி
ஒரு கையில யானைய முறி, முறி
எவன் தந்தது தீமைய
அவன் அரசியல் மூளைய கிழி கிழித்திடு

மர மண்டைய அறிவில பிளந்திட
அவன் தொண்டைய உரிமைகள் திறந்திட
உரப்படுவோம் மறப்படுவோம்
தலைமுறை எல்லாம் கொண்டாட புறப்படுவோம்

சேரி, மாறி போகட்டும்
இந்த செய்தி நிலை ஆகட்டும்
மேல, கீழ தீரட்டும்
நம்ம பூமி புதிதாகட்டும்

சேரி, மாறி போகட்டும்
இந்த செய்தி நிலை ஆகட்டும்
மேல, கீழ தீரட்டும்
நம்ம பூமி புதிதாகட்டும்

பங்காளி யார் சொன்னது
கடன் வாங்கி உயிர் வாழ்ந்துவிட
தினம் தூங்கிவிட
அச்சம் கூச்சம் வெட்கம் கொண்டு
உயிர் வாழ்க என்று

யார் தந்தது எவன் தந்தது
நடு வீட்டிலே குடி வந்தது
சிரம் தாழ்த்தியே
கிட கிட கிட அட அட என்று

ஏமாந்தவன் மாறனும் மாறனும்
அன்னாந்தவன் ஏறனும் ஏறனும்
சுண்ணாம்புல வானவில் ஊத்தி
அடி அடி அடி வண்ணங்கள் அள்ளும்

விழி சேர்ந்திட விண்மீனும் சித்திக்கும்
கரம் சேர்ந்திட கண்ணீரும் தித்திக்கும்
குப்பனும் சுப்பனும் எக்கணும் எக்கனும்
என்னான்னு கேட்க்கனும்

ராமாயி கிருஷ்ணாயி ஏங்காத என் தாயி
எல்லாமே உன்னை வந்து சேரும்
புலி வேஷம் போட்டாலும் நாய் என்றும் உறுமாதே
எதிர்த்தாலே எல்லாமே மாறும்

சோமாறி பேமானி வார்த்தைகள் உருமாறி
அண்ணாத்த வந்தாச்சி செய்தி
அட கோமாளி ஏமாளி வேஷங்கள் தூளாகி
ராஜாளி இடமாச்சி சேரி
நீ பாதி நான் பாதி அதுதானே சம நீதி
வாடா டே பங்காளி

சேரி, மாறி போகட்டும்
இந்த செய்தி நிலை ஆகட்டும்
மேல, கீழ தீரட்டும்
நம்ம பூமி புதிதாகட்டும்

சேரி, மாறி போகட்டும்
இந்த செய்தி நிலை ஆகட்டும்
மேல, கீழ தீரட்டும்
நம்ம பூமி புதிதாகட்டும்



Credits
Writer(s): Govind Vasantha, Karthik Prasanna Rathinam
Lyrics powered by www.musixmatch.com

Link