Poongatru Thirumbuma

பூங்காற்று திரும்புமா, என்பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கிடைக்குமா
பூங்காற்று திரும்புமா, என்பாட்டை விரும்புமா

ராசாவே வருத்தமா
ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கலை
மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை
இந்த வேதனை யாருக்குதான் இல்லை
உன்னை மீறவே ஊருக்குள் ஆளில்லை

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டு பாடி
சொல்லாத சோகத்தை சொன்னேனடி
சுக ராகம் சோகம் தானே
சுக ராகம் சோகம் தானே
யாரது போறது
குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

பூங்காற்று திரும்புமா, என்பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கிடைக்குமா

உள்ள அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேசம்தான் வெளுத்து வாங்குறேன்
உங்க வேசந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே
இச பாட்டு படிச்சேன் நானே
இச பாட்டு படிச்சேன் நானே
பூங்குயில் யாரது
கொஞ்சம் பாருங்க பெண்குயில் நானுங்க

அடி நீதானா அந்த குயில்
யார் வீட்டு சொந்த குயில்
ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நான் தானே அந்த குயில்
தானாக வந்த குயில்
ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link