Jeeraga Biriyani - From "Yennanga Sir Unga Sattam"

என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன்டி
என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன்டி

உன் அழகான கண்ணுக்குள்ள ஆழத்தில் தள்ளிவிட்ட
வேணான்னு பார்வையால சொல்லிவிடாதே
என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன்டி

Tune'ah ஒரு ராகம் வருதே moon'ah உன் face'u தெரிதே
தானா என் மனசும் அட வானத்தில் பறக்குதே
அல்லாஹ் என உன்ன தொழுவேன் தானா நான் மண்ணில் விழுவேன்
கிளியே என் காலும் உன் பாதையை ரசிக்குதே

என் இமையே பெருஞ்சுமையே என்ன கவனி ஒரு கணமே
நீ திரும்பாம போனாலும் திரும்பவும் வருவேன்

என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன்டி

வெயிலாக உன்னில் விழுவேன் ரயிலாக உன்னை தொடர்வேன்
நொடிநேர அசைவும் அடி நெஞ்சில பதியுதே
நீரா நீ என்ன நெனைக்க ஜோரா எனை சுண்டி இழுக்க
குளிர்கால மடி நீ உயிர் வாழும் விதியே நீ

துளியே உயிர் துளியே உயிர் போகும் உந்தன் வழியே
நீயே என் இறையே எந்தன் இரண்டாம் பிறையே

என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன்டி

உன் அழகான கண்ணுக்குள்ள ஆழத்தில் தள்ளிவிட்ட
வேணான்னு பார்வையால சொல்லிவிடாதே

என் ஜீரக பிரியாணி என் ஜீவனே நீதான்டி
நீ போகும் வழியெல்லாம் நான் பாதம் வைப்பேன்டி

நான் பாதம் வைப்பேன்டி
நான் பாதம் வைப்பேன்டி
நான் பாதம் வைப்பேன்டி
பாதம் வைப்பேன்டி

Credits
Writer(s): Guna Balasubramanian, Jegan Kaviraj
Lyrics powered by www.musixmatch.com

Link