Unakaana Ulagam

உயிரானை உறவாய் ஆனாய்
அன்பை தந்ததாலே அன்னை ஆனாய்

உனக்கான உலகம் உதிக்கின்ற தருணம்
இமைக்கின்ற நொடியில் நிறம் மாறும் முழுதும்
உனக்கான கனவு இழக்கின்ற பொழுது
பிறர் காணும் கனவு அவை யாவும் உனது

இது காலம் எழுதிடும் கணக்கு
இதை மாற்ற துடிப்பது எதற்கு
அவன் காட்டும் வழி உந்தன் கிழக்கு
சில கோடி இதயம் உன் இலக்கு

இதுதான், இதுதான் எந்தன் தோற்றம் என்றே
தீயும் நீரும் சொல்லாதென்றும்
இதுதான், இதுதான் எந்தன் பாதை என்றே
வானும் காற்றும் செல்லாதெங்கும்

திருப்பங்கள் நிகழும் இருதயம் நெகிழும்
சில ஆயிரம் சிறகுகள் சூடிடடி
புது வானில் ஏறிடடி
புதிதாக மாறிடடி

உலகில், உலகில் உயிர்கள் பூக்கையிலே
கடமை, கடமை ஒன்றும் மலரும்
இருளில் சுழலில் உழலும் வாழ்கை எல்லாம்
ஒரு நாள் ஒரு நாள் உன்னால் புலரும்

உலகை நீ விரும்ப உனை அது விரும்பும்
எனும் வாக்கியம் ஆனது காட்சியடி
இது அன்பின் ஆட்சியடி
அந்த வானம் சாட்சியடி

உனக்கான உலகம் உதிக்கின்ற தருணம்
இமைக்கின்ற நொடியில் நிறம் மாறும் முழுதும்
உனக்கான கனவு இழக்கின்ற பொழுது
பிறர் காணும் கனவு அவை யாவும் உனது

இது காலம் எழுதிடும் கணக்கு
இதை மாற்ற துடிப்பது எதற்கு
அவன் காட்டும் வழி உந்தன் கிழக்கு
சில கோடி இதயம் உன் இலக்கு



Credits
Writer(s): G.v.prakash Kumar, Karky
Lyrics powered by www.musixmatch.com

Link