Vaa Vaa Anbe

வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்

வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான்
அந்தி வெயில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம்
புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும்

போதும் போதும் தீர்ந்தது வேதனை
வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை
விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை

வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்

வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது
நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது
மலரை வண்டு மொய்த்திட மாதம் தேதி ஏது
மீன மேஷம் பார்ப்பதோ காதல் தோன்றும் போது

காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன்
கையில் நான் உன்னை வாங்கினேன் வாங்கினேன்
நீயும் நீயல்ல நானும் நானல்ல கண்ணா

வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்

வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link