Oorellam Un Paattu (Male Version)

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாளெது
ஓகோ ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

ஆண்: உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிற்காலம் தான்
என் மனம் உன் வசமே கண்ணில் என்றும் உன் சொப்பனமே
விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம் தான்
ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி
ஆடும் நினைவுகள் நாளும் வாழும் உனதருள் தேடி
இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும் எந்தன் உயிர் உனை சேரும்

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாளெது
ஓகோ ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link