Nalla Velli

நல்ல வெள்ளி கிழமையிலே
அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன்
உந்தன் பெருமை சொல்ல
வண்ணப்பூ தொடுத்தேன் நீ சூடிக்கொள்ள

நல்ல வெள்ளி கிழமையிலே
அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன்
உந்தன் பெருமை சொல்ல
வண்ணப்பூ தொடுத்தேன் நீ சூடிக்கொள்ள
வாடியம்மா வாழ்த்திடத்தானே
காந்தாரியம்மா உன் மகன் நானே

நல்ல வெள்ளி கிழமையிலே
அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன்
உந்தன் பெருமை சொல்ல
வண்ணப்பூ தொடுத்தேன் நீ சூடிக்கொள்ள

ஆலைக்கரும்பாலை நாம் போடலாம்
ஆத்தா அருள் தானே சாராக்குது
சாரை பாகாக நாம் காய்ச்சலாம்
அம்மா அருள் தானே இனிப்பாக்குது

செய் தொழில் நேத்தியுடன்
செய்திட வேண்டும் என்று
அக்கரை காட்டுகின்ற
சக்கரை தேவன் இங்கு
ஊர் மதிக்க பேர் விளங்க
வாழ்வதெல்லாம் உன் அருளால் தானே

வெள்ளி கிழமையிலே
அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன்
உந்தன் பெருமை சொல்ல
வண்ணப்பூ தொடுத்தேன் நீ சூடிக்கொள்ள

இங்கே நான் கொண்ட கைராசியே
அம்மா அவள் தந்த அருள் ஆசியே
என்றும் எனை காக்கும் மகராசியே
வாழ்வேன் நான் உந்தன் புகழ் பேசியே

பிள்ளைகள் மேன்மைக்கெல்லாம்
பெற்றவள் ஏணியடா
அக்கரை சேர்வதற்கு
அன்னைதான் தோணியடா
காலமெல்லாம் காவலுக்கு
தாயிருக்க கவலைகள் ஏது

வெள்ளி கிழமையிலே அம்மா உன் வாசலிலே
பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல
வண்ணப்பூ தொடுத்தேன் நீ சூடிக்கொள்ள
வாடியம்மா வாழ்த்திடத்தானே...
காந்தாரியம்மா உன் மகன் நானே

நல்ல வெள்ளி கிழமையிலே
அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன்
உந்தன் பெருமை சொல்ல
வண்ணப்பூ தொடுத்தேன் நீ சூடிக்கொள்ள



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link