Poovattam

பூவாட்டம் காயாட்டம் கன்னி தோட்டம்
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே
பால் ஆட்டம் தேன் ஆட்டம் பந்தலாட்டம்
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கூட்டம்
மட்டம் பார்த்து கை தாவுதே
சட்டம் திட்டம் சம்பந்தம் மீறி
ஜாதிப் பூவும் கைதாகுதே

பூவாட்டம் காயாட்டம் கன்னி தோட்டம்
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே
பால் ஆட்டம் தேன் ஆட்டம் பந்தலாட்டம்
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே
ஆசை ஊறுதே அந்தரங்கமா
ஆடிக் காத்துக்கு பஞ்சு தப்புமா
சேலை மூடுது மேக மூட்டமா
தொட்டு உரசிட மின்னல் வெட்டுமா

வேலை வெட்டிக்கு விடுமுறை தானா
வீணா திரிஞ்சாலே காதல் வருமா
வெட்டி வேருக்கு விளம்பரம் வேண்டாம்
வாசம் எழுந்தாலே அடங்கிடுமா
மெட்டி அணிய விரல தரவா
மொட்டு தித்திக்க முத்தங்கள் இடவா

பூவாட்டம் காயாட்டம் கன்னி தோட்டம்
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே
பால் ஆட்டம் தேன் ஆட்டம் பந்தலாட்டம்
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே
மொட்டு தாமர தத்தளிக்குமா
சொட்டும் வேர்வையில் முக்குளிக்குமா
கட்டும் சேலைக்கு கப்பம் கட்டுமா
கன்னம் பாறையில் சிற்பம் வெட்டுமா

முத்தம் கொடுத்திட பனித்துளி தானா
மச்சான் கொடுத்தாலே கசந்திடுமா
கட்டில் விளும்புல தவிக்கிறேன் நாளா
கட்டிப் புடிச்சாலே கசங்கிடுமா
கள்ளி நெலவே காதல் மலரே
பார்வை தீயில நெஞ்சுக்குள் குளிரே

பூவாட்டம் காயாட்டம் கன்னி தோட்டம்
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே
பால் ஆட்டம் தேன் ஆட்டம் பந்தலாட்டம்
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கூட்டம்
மட்டம் பார்த்து கை தாவுதே
சட்டம் திட்டம் சம்பந்தம் மீறி
ஜாதிப் பூவும் கைதாகுதே

பூவாட்டம் காயாட்டம் கன்னி தோட்டம்
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே
பால் ஆட்டம் தேன் ஆட்டம் பந்தலாட்டம்
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Kadhal Mathi
Lyrics powered by www.musixmatch.com

Link