Veppamaram

சூம் சும் சும் சும் சும் சும் சும்

வேப்பமரம் புளியமரம்
ஆலமரம் அரசமரம்
ஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ
ஆத்தங்கரை தெப்பகுளம்
குளிக்கவரும் செங்கமலம்
ஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ

பஞ்சாலை சங்கு சத்தம்
கேட்காத தூரம் போறேன்
ஊரை சுற்றும் குருவி
பார்க்காத தூரம் போறேன்

காக்கிச் சட்டை போட்டு கிட்டு
போக போறேன் ஊரை விட்டு
காக்கிச் சட்டை போட்டு கிட்டு
போக போறான் ஊரை விட்டு
சூம் சும் சும் சும் சும் சும் சும்

வேப்பமரம் புளியமரம்
ஆலமரம் அரசமரம்
ஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ
ஏய் ஆத்தங்கரை தெப்பகுளம்
குளிக்கவரும் செங்கமலம்
ஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ
சில்லுனு காலையில் எழுந்திருச்சி
சிலம்ப காத்துல சுழட்டுவேங்க
சுத்தும் சிலம்பு பட்டு
கொஞ்சம் காயம் பட்டா
நான் பொறந்த மண்ணெடுத்து பூசுவேனுங்க

ஹே பல நாள் ஆசை நனவாச்சு
பெத்தவரு மனசு குளிர்ந்தாச்சு
புல்லெட் வண்டி மேல ராக்கெட் வேகத்துல
பந்தாவா சீறிகிட்டு போக போறேங்க

ஆறுசாமி பவனி சாலையில போனா
பண்ணையாரு போடும் மேல் துண்டு இரங்கும்
கலர் கலர் தாவணிய பார்த்துபுட்டா போதும்டா
சாமியோட பவனி கைய கட்டி நிக்கும்டா

வேப்பமரம் புளியமரம்
ஆலமரம் அரசமரம்
ஹேய் வேப்பமரம் புளியமரம்
ஆலமரம் அரசமரம் ஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ
ஹேய் ஆத்தங்கரை தெப்பகுளம்
குளிக்கவரும் செங்கமலம்
ஊர விட்டு போகபோறேன் கேட்டுக்கோ
ஏ ராசா ராசா ராசா
ஏ தேனே தேனே தேனே
எங்கே நீ போற ராசா ராசா ராசா
ஏ தேனே தேனே தேனே தேனே ஹே
அயிலே அயிலே அயிலே ஹோ ஹோ
அயிலே அயிலே அயிலே ஹோ ஹோ
அயிலே அயிலே அயிலே ஹோ ஹோ
அயிலே அயிலே அயிலே ஹோ ஹோ

கள்ள நோட்ங்க அடிக்கிறவன்
கந்து வட்டி வாங்கி சுரண்டுறவன்
கோழி திருடுறவன்
ஆட்டை அமுக்குறவன்
ஆறு மாச டைம்குள்ள திருந்திடுங்க

வைப்பாட்டி வச்சா ஒதைப்பேங்க
பெத்தவள திட்டுனா மிதிபேங்க
கோலி கில்லி தண்டா
ஆடும் பசங்க கண்டா
கூட்டத்தில் கொண்டாட்டமா சேர்த்துக்குவேங்க

ஆக்கரு குத்துற பம்பரத்தை போல
தப்பு நீயும் செஞ்சா தலையில குட்டுவான்
குட்டு பட்ட நீயும் குத்தம் உணர்ந்து புட்டா
சத்தியமா எனக்கு வேறொன்னும் வேணாண்டா

வேப்பமரம் புளியமரம்
ஆலமரம் அரசமரம்
ஊர விட்டு போகபோறான் கேட்டுக்கோ
ஆத்தங்கரை தெப்பகுளம்
குளிக்கவரும் செங்கமலம்
ஊர விட்டு போகபோறான் கேட்டுக்கோ

பஞ்சாலை சங்கு சத்தம்
கேட்காத தூரம் போறேன்
ஊரை சுற்றும் குருவி
பார்க்காத தூரம் போறேன்

காக்கிச் சட்டை போட்டு கிட்டு
போக போறேன் ஊரை விட்டு
எலேய் காக்கிச் சட்டை போட்டு கிட்டு
போக போறான் ஊரை விட்டு

தும் தும் நானா தும் தும் நானா
தும் தும் நானா தும் தும் நானா தும்
தும் தும் நானா தும் தும் நானா
தும் தும் நானா தும் தும் நானா தும்



Credits
Writer(s): Muthukumar Na, Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link