Oru Vellai Sotrukkaga

ஹே - ஹே - ஹே - ஹே
ஆ - ஆ - ஆ

ஒரு வேலை சோற்றுக்காக
உடல் வாடிட
கையேந்தி ஓடுகின்றோம்
உயிர் வாழ்ந்திட

பசியென்ற தீயில் இறைப்பை
சாம்பல் ஆகுதே!
மனிதநேயம் எங்கே
இங்கே செத்துப்போனதே!
இருப்பவன் கொஞ்சம் தந்தால்
இல்லாத ஏழை இல்லையே!
கண் திறந்து இறைவா பாரு
எல்லோரும் உன் பிள்ளையே!

ஒரு வேலை சோற்றுக்காக
உடல் வாடிட
கையேந்தி ஓடுகின்றோம்
உயிர் வாழ்ந்திட

இல்லாத ஏதோ ஒன்றை
தேடும் வாழ்விலே!
பிறந்த மனிதன் எல்லோருமே
உலகில் பிச்சைக்காரரே!

பிறக்காத பேரனுக்கு
சேர்க்கும் வாழ்விலே
பசிக்கின்ற ஏழைக்கெல்லாம்
கடவுள் மட்டும் தான் காவலே!

கிடைத்தாலும் நீ தேடும் எதுவும்
கிடைக்காமல் போனாலும்
அவமானம் ஏமாற்றம் உன்னை
தினந்தோறும் தொடர்ந்தாலும்

திருவோடும் இல்லாமல் நீ ஓர்
தெருவோரம் கிடந்தாலும்
அஞ்சாதே உலகத்தின் முடிவில்
அவனுண்டு எந்நாளும்

ஆ - ஆ - ஆ - ஆ

ஒரு வேலை சோற்றுக்காக
உடல் வாடிட!
கையேந்தி ஓடுகின்றோம்
உயிர் வாழ்ந்திட!

பசியென்ற தீயில் இறைப்பை
சாம்பல் ஆகுதே!
மனிதநேயம் எங்கே
இங்கே செத்துப்போனதே!

இருப்பவன் கொஞ்சம் தந்தால்
இல்லாத ஏழை இல்லையே!
கண் திறந்து இறைவா பாரு
எல்லோரும் உன் பிள்ளையே!



Credits
Writer(s): Vijay Antony, Annamalai
Lyrics powered by www.musixmatch.com

Link